Wednesday, May 16, 2007

ஸ்வர்ண காமாக்ஷி


ஓம் கணேசா

ஸ்வர்ண காமாக்ஷி

வேத வேத ரூபிணி, வேதம் பாடும் மாமணி
நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி
மாதவத்தின் சக்தி நீ, மாரன் பாடும் மாலினி
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

மங்களத்தின் நங்கையே, மதியணிந்த மங்கையை,
பொங்குகின்ற கங்கையே, பொன்னியான மங்கையை,
எங்குமுள்ள சங்கைதீர எண்ணுகின்ற மங்கையே,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

துன்பமான வாழ்வொளி, இனிய ஞான பேரொளி,
அன்பு ஆன உள்ளொளி, அழகில் ஞான பேரொளி,
துன்பம் ஓட்டும் தூயொளி, துரிய ஞான பேரொளி,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

காலை மாலை இரவும் நீ,காஞ்சி தந்த வாழ்வு நீ,
வேலை வென்ற விழியவன் வேண்டி வந்த வாழ்வு நீ,
சோலை தந்த மலரும் நீ, சோகமற்ற வாழ்வு நீ,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

கரும்பு வில்லும் ஏந்தினாள், கவலை தீர்க்க ஆடினாள்,
விரும்புகின்ற மொழியினாள், விண்ணை ஆளும் விழியினாள்,
பருவமாகி முகிலுமாகி பயிருமான விழியினாள்,
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ

தஞ்சை வந்த தாயவள், தகைமை தன்னை பாடுவார்,
பஞ்சமற்ற வாழ்வொடு, பண்பு மிக்க மகவொடு,
மஞ்சளோடு திலகமும், மணம் மிகுந்த மலரொடும்,
விஞ்சுகின்ற புகழொடும், விண்ணும் மண்ணும் ஆளுவார்
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ
ஜோதி ஜோதியான நீ, ஸ்வர்ண காமாக்ஷி நீ


இந்த பாட்டை பதிவிட விரும்பிய ஹேமபிரியாவிற்கும், மற்றவர்களுக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன். இப்பாடலை கேட்டு மகிழ இதில் முதல் பாடலை சொடுக்கவும். பாட்டிற்கும் நான் எழுதியுள்ளதிற்கும் வித்யாசம் இருந்தால் தெரிவிக்குமாரு கேட்டுக்கொள்கிறேன்.