
கல்லான என்மனதில்
கவின்மலராய் பூத்தவளே!
முள்ளாலே நிறைந்திடினும்
மகிழ்ந்ததிலே முகிழ்த்தவளே!
இல்லடையாய் வந்தவரை
இரக்கமுடன் ஏற்பவளே!
அல்லல்எல்லாம் தீர்த்(து)அவரை
அருமையுடன் காப்பவளே!
துன்பமென்று ஏதுமுண்டோ
உன்னடிகள் பணிந்தபின்னே!
இன்பமொன்றே தரும்உந்தன்
பார்வைமேலே பட்டபின்னே!
சொல்லாலே உன்னன்பை
சொல்லுவதும் சாத்தியமோ!
புல்லறிவால் உன்பெருமை
புகன்றிடவும் இயன்றிடுமோ!
--கவிநயா