Monday, March 15, 2010

அவள் அன்பிற்கு ஈடென எதுவுமில்லை!


அன்னையை போல்இங்கு எவருமில்லை
அவள்அன்பிற்கு ஈடென எதுவுமில்லை

கன்னியாய் அன்னையாய் அவளிருப்பாள் - தன்னை
எண்ணிய பேருக்கு அருள்சுரப்பாள்
சென்னியில் பூம்பதம் பதித்திடுவாள் - நம்மை
கண்ணிமை போலவே காத்திடுவாள்

கனவிலும் நினைவிலும் கலந்திருப்பாள் - எந்தன்
மனதினில் மலரென மலர்ந்திருப்பாள்
ஒவ்வொரு செயலிலும் ஒளிந்திருப்பாள் - எந்தன்
உயிரினில் உவந்தவள் ஒளிர்ந்திருப்பாள்

பஞ்சினும் மெல்லிய பாதம்ஒன்று - அது
அஞ்சிடும் நெஞ்சிற்கு அபயம்என்று
நஞ்சையும் அமுதென ஆக்கித்தரும் - அது
கொஞ்சிடும் அன்பினில் குழைந்துவரும்

-கவிநயா

படத்துக்கு நன்றி: http://gallery.spiritualindia.org/photos/kali/Hindu-Goddess-Devi-Kali-Maa-Photo-0018.jpg.html

7 comments:

  1. பஞ்சு னும் மெல்லிய பாதம் உடையாளை அடிக்கடி அழைத்து கொண்டு இருக்கிறிர்கள் அன்பிற்கு வரையரை உண்டோ ...... சித்ரம் ..//

    ReplyDelete
  2. //ஒவ்வொரு செயலிலும் ஒளிந்திருப்பாள்//

    அன்னையே நம்முள் ஒளியா நின்று நம்மைக்காத்து நம்மை ஒளிரச்செய்பவள்.
    செய்பவ எல்லாமே அவள் செயல் என அன்னையிடம் சரணடைந்தோர்
    இம்மையிலும் மறுமையிலும் வேண்டுவன எல்லாமே பெறுவர்.

    ஆதியும் அவளே ! அந்தமும் அவளே !
    ஆகையால் அவளது கீதத்தினை மத்யமாவதி ராகத்தில் பாட முனைந்தேன்.
    நல்ல குரல் வளம் உள்ளவர் பாடினால் நன்றாக இருக்கும்.

    சுப்பு ரத்தினம்.
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  3. வாருங்கள் சித்ரம்(ரா). வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. //அன்னையே நம்முள் ஒளியா நின்று நம்மைக்காத்து நம்மை ஒளிரச்செய்பவள்.//

    அழகாக சொன்னீர்கள் தாத்தா.

    பாடல் மத்யமாவதியில் அழகாக அமைந்திருக்கிறது. மிகவும் நன்றி தாத்தா.

    சித்ராவுடைய பாடலையும் இன்றுதான் கேட்க முடிந்தது. அதுவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  5. You could easily be making money online in the underground world of [URL=http://www.www.blackhatmoneymaker.com]blackhat seo software[/URL], Don’t feel silly if you don't know what blackhat is. Blackhat marketing uses little-known or misunderstood methods to generate an income online.

    ReplyDelete
  6. //பஞ்சினும் மெல்லிய பாதம்ஒன்று - அது
    அஞ்சிடும் நெஞ்சிற்கு அபயம்//

    பஞ்சஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. :)

    ReplyDelete
  7. //பஞ்சஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. :)//

    ஆம் ராதா. சிக்கென பிடித்து விட்டீர்கள் :) மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.

    ReplyDelete