சுபபந்துவராளி ராகத்தில் கீதாம்மாவின் தேனினிய குரலில்.... மிக்க நன்றி கீதாம்மா!
ரொம்ப நாளுக்கப்புறம் சுப்பு தாத்தா பாடித் தந்திருக்கிறார். அவசியம் கேளுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
என்ன உன் விளையாட்டு
தாயே? எந்தன்
வாழ்வினைக் களமாக்கி
மகிழ்பவள் நீயே
(என்ன)
மாயையின் வடிவினளாய்
மதிமயக்கம் தருவாய்
ஞானத்தின் வடிவினளாய்
மாயத்திரை விலக்கிடுவாய்
(என்ன)
நித்தம் உன்னை
நினைந்தும் சித்தமும் கலங்குவதேன்?
பித்துப் பிடித்தது
போல் புத்தியும் மயங்குவதேன்?
மாய வடிவை விட்டு
மதி மயக்கம் தீராய்
ஞானத்தின் வடிவெடுத்து
நல் வழியைத் தாராய்
(என்ன)
--கவிநயா
நித்தம் உன்னை நினைந்தும் சித்தமும் கலங்குவதேன்?
ReplyDeleteபித்துப் பிடித்தது போல் புத்தியும் மயங்குவதேன்?
மாய வடிவை விட்டு மதி மயக்கம் தீராய்
ஞானத்தின் வடிவெடுத்து நல் வழியைத் தாராய்
அழகான வரிகள்
நன்றி அக்கா !
mikka nandri shylan
Deleteஅக்கா என்ன ஆச்சு ?
ReplyDeleteout of town. aduththa vaaram muthal annai aruL irunthaal meendum ezhuthuven. thank you for the concern shylan.
Deleteநீங்க பதிவிட வில்லை என்றவுடன் சின்ன concern , நீங்க எப்போதும் பதிவிட தவறுவதில்லை. உங்களுக்கு அம்மாவின் ஆசியும் அருளும் எப்போதும் உண்டு , சில நேரங்களில் பாடலில் கூறியவாறு விளையாடுவ , நமக்கு தான் உயிர் போய்வரும் . தேங்க்ஸ் அக்கா.
Delete