கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
மதுரை மல்லிகை
போலச் சிரிக்கும் மங்கல மீனாக்ஷி
இதய மடுவில் தாமரை
உன் எழில் மிகு காட்சி
விழி மூடிடும் போதினிலும்
தோன்றிடும் உன் முகமே
பாடிடும் நாவினிலே தினம்
ஆடிடும் உன் பெயரே
(மதுரை)
தோளினிலே கிளியை
அவள் தாங்கியிருப்பாள்
தாளில் விழுந்தோருக்
கவள் தோள்கள் கொடுப்பாள்
பச்சை நிற மேனி, அவள்
பாண்டி நாட்டு ராணி
இச்சையுடன் தொழுபவரின்
துன்பந் தீர்க்கும் தோணி
(மதுரை)
சுந்தரனின் சுந்தரத்தில்
சொக்கி விட்டவளாம்
மந்திரம்போல் அவன்
சிரிப்பில் மயங்கி விட்டவளாம்
போர் முனையில் சென்று
தனை மறந்து நின்று
ஆயுதத்தைத் தவற விட்டு
அவன் அழகில் கிறங்கிச் சற்று
(மதுரை)
--கவிநயா
No comments:
Post a Comment