Monday, September 17, 2018

தாயே கருமாரி


அம்மா தாயே கருமாரி
அருள் புரிவாயே மகமாயி
உன்னால் தானே அபிராமி
உலகம் இயங்குது அருள்வாமி
(அம்மா)

இருவிழி கருணை கண்டதுமே
முவ்வினை பயந்தே ஓடுதம்மா
கனியிதழ் முறுவல் கண்டதுமே
கன்னித்தமிழ் கானம் பாடுதம்மா
(அம்மா)

சாந்தஸ்வரூபிணி முகம் கண்டால்
சஞ்சலம் எல்லாம் அகலுதம்மா
காந்தம் போலுன் எழில்வடிவம்
கவர்ந்தே என்னை இழுக்குதம்மா
(அம்மா)

காலிற் சிலம்புகள் ஒலித்திடவே
கணவனுடன் நடம் புரிந்திடவே
ஓதிடும் அடியவர் உயர்வுறவே
உடனே வருவாய் உமையவளே
(அம்மா)


--கவிநயா

No comments:

Post a Comment