Monday, November 17, 2008

96. ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம் !

அம்மாவுக்கு என் சொந்தக் கவிதைகளைக் கேட்டு அலுத்துப் போகுதோ இல்லையோ, படிக்கிறவங்களுக்கு அலுத்திருக்குமோன்னு ஒரு எண்ணம் :) அதனால இந்த முறை நிறையப் பேருக்குப் பிடிச்ச, சுசீலாம்மா பாடின பாடல்கள்ல ஒண்ணைப் பார்க்கலாமா? "ரக்ஷ ரக்ஷ ஜகன் மாதா" இசைத் தட்டுல வருகிற இந்த அருமையான பாடல்களை எல்லாம் எழுதியவர் யாருன்னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...



ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம்
அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம்

(ஆயிரம்)

ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம் சந்தனக் காப்பு

(ஆயிரம்)

நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்

(ஆயிரம்)

ஒலி வடிவம்

9 comments:

  1. அருமையான பாடல்...பல நாட்கள் கழித்து கேட்கத் தந்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  2. //"ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப் பூ எங்கள் தேவி முகம் !"//

    ஆயிரம் தடவை கேட்டாலும் மெய் சிலிர்க்க வைக்கும் இதன் ஒலி வடிவம்.

    பகிர்தலுக்கு நன்றி கவிநயா.

    ReplyDelete
  3. ஆம், வெகு அழகான பாடல். வருகைக்கு நன்றி மௌலி, ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  4. இனிமையான பாடலை இன்னொரு முறை கேட்டுக் கொண்டிருக்கிறேன். நன்றி அக்கா.

    ReplyDelete
  5. 96 ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள்-க்கா!! :)
    கார்த்திகைக்கு 100 அகல்! சொல்லிப்புட்டேன்! :))

    ReplyDelete
  6. //முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
    அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம் சந்தனக் காப்பு//

    எனக்கும் மிகவும் பிடிச்ச வரிகள்! திரும்பத் திரும்ப ஹம் பண்ணுவேன்!

    ReplyDelete
  7. எனக்கும் ரொம்பப் பிடிச்ச பாடல். இந்த இசைத்தட்டு முழுசுமே மனப்பாடம்தான் :) கேட்டு ரசிச்ச குமரனுக்கும் கண்ணனுக்கும் நன்றி.

    100-அகல் உங்க பொறுப்புதான் தம்பீ :)

    ReplyDelete
  8. அருமையான படைப்பு..

    ReplyDelete