Monday, July 20, 2009

எல்லாம் நீயே அம்மா !



அணுவில் அணுவாய் ஒளிந்தாய்
அலையில் நுரையாய் மிதந்தாய்
கருவில் உயிராய் நுழைந்தாய்
காற்றில் இசையாய்க் கலந்தாய்

வானம் ஆனாய் விரிந்தாய்
மேகம் ஆகிப் பொழிந்தாய்
கதிரவன் ஆகி ஜொலித்தாய்
குளிர் நிலவாகிச் சிரித்தாய்

மலரில் தேனாய் நிறைந்தாய்
வண்டாய் அதனை உண்டாய்
பகலாய் இரவாய்ப் பிரிந்தாய்
புவியின் விசையாய்ச் சுழன்றாய்

இன்பம் துன்பம் வைத்தாய்
அதிலுன் நினைவைத் தைத்தாய்
உணர்ச்சியில் உழலச் செய்தாய்
உணர்ந்தபின் தெளிவும் தந்தாய்

மாயையும் ஞானமும் நீயே!
எங்கும் நிறைந்த என் தாயே!
எல்லாம் நீயே அம்மா!
எதிர்வந் தருள்வாய் அம்மா!


--கவிநயா

6 comments:

  1. /வானம் ஆக விரிந்தாய்
    மேகம் ஆகிப் பொழிந்தாய்
    கதிரவன் ஆகி ஜொலித்தாய்
    குளிர் நிலவாகிச் சிரித்தாய் /

    எல்லாம் நீயே
    எம்மையும் காப்பாய்
    எந்நாளும்

    ReplyDelete
  2. வருகைக்கு மிக்க நன்றி திகழ்மிளிர்.

    ReplyDelete
  3. //மாயையும் ஞானமும் நீயே!
    எங்கும் நிறைந்த என் தாயே!
    எல்லாம் நீயே அம்மா!
    எதிர்வந் தருள்வாய் அம்மா!//

    எல்லாம் நீயே அம்மா
    எல்லரை யும்காப் பாற்று அம்மா

    ReplyDelete
  4. ந. செந்தில் குமார், புதுக்கோட்டைJuly 21, 2009 at 2:14 PM

    //இன்பம் துன்பம் வைத்தாய்
    அதிலுன் நினைவைத் தைத்தாய்
    உணர்ச்சியில் உழலச் செய்தாய்
    உணர்ந்தபின் தெளிவும் தந்தாய்//

    வாழ்கையின் தத்துவத்தை எளிமையாக அருமையாக பிழிந்தாய். (ஜூஸ்)

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி கைலாஷி.

    ReplyDelete
  6. //வாழ்கையின் தத்துவத்தை எளிமையாக அருமையாக பிழிந்தாய். (ஜூஸ்)//

    அது சரி :)

    வருகைக்கு நன்றி செந்தில் குமார்.

    ReplyDelete