நீஎந்தன் உயிரிலே...
நீஎந்தன் உயிரிலே
நினைவெந்தன் மனதிலே
நித்தம்உன்னை எண்ணி
பாடினேன் அன்பிலே
புயலன்ன வாழ்விலே
இலையன்ன நானுமே
திசையென்ன அறியாமல்
அலைகின்ற போதிலே
புகலொன்று வேண்டியே
புவியாளும் ராணியே
உன்னிழலை தேடியே
வந்தேனே ஓடியே
உறவென்று உன்னையே
உரமென்று நம்பியே
உள்ளத்தில் உனையிட்டு
வைத்தேனே அன்னையே
பாதைகா ணாமலே
பரிதவிக்கும் போதிலே
பரிதியென வருவாயே
தேசொளிரும் தேவியே!
--கவிநயா
உறவென்று சொன்ன பொழுதில் ஓம்காரமாகி வருவாள்
ReplyDeleteவரமென்று நாடுபவர் சிந்தை குளிரத் தருவாள்
பவமென்னும் பிணியகற்றிச் சுக ஆனந்தம் நிறைப்பாள்
புவனங்கள் காக்கின்ற நாயகி என்னையும் மறப்பாளோ?
நன்றாக சொன்னீர்கள் கிருஷ்ணமூர்த்தி சார். வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDelete