Monday, August 24, 2009

என் அன்னை நீயே!



என் அன்னை நீயே
என் னுயிர்த் தாயே
உன் திருப் பதங்கள்
சரணம் அம்மா

என் கண்ணின் மணியே
கண் காக்கும் இமையே
உன் அருள் பதங்கள்
சரணம் அம்மா

உள்ளன்பால் உன் பெயரை
உச்சரிக்கின்றேன்
பதர் என்னைக் கரையேற்ற
விரைந்தோடி வருவாய்

விதி எந்தன் வழி மறிக்க
விழி நீரோ கண் மறைக்க
இறைஞ்சி உன்னை அழைக்கின்றேன்
இரங்கி நீ வருவாய்

என்னுள்ளே உன்னை ஏற்றி
விளக்காக வைத்தேன்
இருள் அகற்றி ஒளி பரப்ப
இக்கணமே வருவாய்!


--கவிநயா

4 comments:

  1. // Hindu Marriages In India said...
    நல்ல கவிதை//

    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அழுதால் பெறலாமென்பது அந்தக் காலம்!
    அழுவது வழியைக் காண விடாதென்பது இந்தக் காலம்!

    அழுவதும் வீணே அதில் கழிக்கும் பொழுதும் வீணே

    வழியைக் காணத் திடமாய் நில்லு!
    அரவிந்த அன்னை சொல்லும் புதுப்பாடம்!

    ReplyDelete
  3. அழுதா அம்மாவே வந்து கூட்டிப் போவான்னுதான்... :)

    வருகைக்கு நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்.

    ReplyDelete