திருமாலவனின் திருமார்பினிலே
சுடராய் ஒளியாய் இருப்பவளே!
திரைமாக் கடலை ததியாய் கடைய
மலராய் மகிழ்வாய் முகிழ்த்தவளே!
பகலினில் எத்தனை சூரியரோ என
பகலவன் மயங்கிடும் பேரெழிலே!
இரவினில் மலர்ந்திட்ட தாமரையோ என
சந்திரன் மயங்கிடும் சுந்தரியே!
வண்டுகள் போலிரு கருவிழிகள் எழில்
மாதவன் மலர்முகம் சுற்றிடுமே!
செண்டுகள் போலிரு தளிர்க்கரங்கள் அந்த
மாயவன் திருவடி பற்றிடுமே!
பூமகளே பசும்பொன் னழகே இந்த
நானிலம் காத்திடும் நாயகியே!
வான்மகளே எங்கள் தேவதையே இந்த
மாநிலம் வணங்கிடும் வசுந்தரியே!
தாமரை மலரெழில் விஞ்சுகின்ற செந்
தாமரைப் பதங்கள் சரணம் அம்மா!
தாமோ தரன்அவன் கொஞ்சுகின்ற பூந்
தாமரை வடிவே வரணும் அம்மா!!
--கவிநயா
ஷைலஜா அக்கா குரலில் - நன்றி அக்கா!
SriLakshmi_song_su... |
ம்ம்ம்..இனிமேல் அந்த வலைப்பூவிற்கும் வந்து எட்டி பார்க்கிறேன். :-)
ReplyDelete:) நன்றி ராதா! :)
ReplyDeleteஅழகேல்லம் அழகல்லவே அனைத்திலும் பேரழகே
ReplyDelete........எதிலும் உன் அழகே
..அருமை
...சித்ரம் //
வாருங்கள் சித்ரம். மிக்க நன்றி.
ReplyDelete//தாமரை மலரெழில் விஞ்சுகின்ற செந்
ReplyDeleteதாமரைப் பதங்கள் சரணம் அம்மா!
தாமோ தரன்அவன் கொஞ்சுகின்ற பூந்
தாமரை வடிவே வரணும் அம்மா!!//
எல்லார் வீட்டிற்கு வந்து அருள் பாலிப்பாய் தாயே.
super
ReplyDeletei need "Asta Lakshmi songs" singer : Mr. Veeramani and lady voice i dont know but its very nice songs
please post that songs
மனம் குளிர்ந்து கேட்டேன்! மிக்க அருமை கவிநயா! என் அன்பான பாராட்டுகள் (ஷைலஜா அக்காவுக்கும் சேர்த்து தான் பராட்டு 50% கொடுத்து விட்டு மீதியை வைத்துக்கவும்)
ReplyDelete//Sun said...
ReplyDeletesuper//
முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி!
//i need "Asta Lakshmi songs" singer : Mr. Veeramani and lady voice i dont know but its very nice songs
please post that songs//
தேடிப் பார்த்து, கிடைத்தால் கண்டிப்பாய் இடுகிறோம்.
//மனம் குளிர்ந்து கேட்டேன்! மிக்க அருமை கவிநயா! என் அன்பான பாராட்டுகள் (ஷைலஜா அக்காவுக்கும் சேர்த்து தான் பராட்டு 50% கொடுத்து விட்டு மீதியை வைத்துக்கவும்)//
ReplyDeleteபாடலை ரசித்ததற்கு மிக்க நன்றி அபி அப்பா.
உங்கள் பாராட்டுகள் அத்தனையும் (100%) ஷை அக்காகிட்டயே சேர்த்துடறேன் :)