உன்னையன்றி ஒருவரிடம் உள்ளம் செல்லுமோ? - உந்தன்
நாமமன்றி வேறுஒன்றை நாவும் சொல்லுமோ? - அம்மா
(உன்னை)
உன்னையன்றி ஒருவரைஎன் கண்கள் காணுமோ? - உந்தன்
புகழையன்றி வேறெதுவும் செவிகள் கேளுமோ? - அம்மா
(உன்னை)
கண்ணை விட்டு மணியிருந்தால் ஒளியும் உண்டோ?
உன்னை விட்டு நானிருந்தால் பொருளும் உண்டோ?
என்னி(ண்ணி)ல் உடன் நீவரவே உன்னை எண்ணியே
பண்ணில் வைத்துப் பாடுகின்றேன் எந்தன் அன்னையே
(உன்னை)
--கவிநயா
http://www.youtube.com/watch?v=aIdaUztIu7g
ReplyDeleteinge varungal.
iniya kavinayavin
gaanam kezhungal.
subbu thatha
வாங்க தாத்தா. ரொம்ப நாளாச்சே பார்த்துன்னு நினைச்சேன் :)
ReplyDeleteபாடல் அருமையாக வந்திருக்கு. (நான் நினைத்துக் கொண்டிருந்த மெட்டிலேயே) உருக்கமாக. மிக்க நன்றி தாத்தா.
again
ReplyDeletewww.youtube.com/PichuPeran
in Raag Arabhi.
subbu thatha
வாங்க தாத்தா. இந்த பாட்டு ரொம்ப பிடிச்சு போச்சா? எனக்குமேதான் :) ஆரபி ராகமும் அருமையா வந்திருக்கு. ஆனால் 2:30 நிமிஷத்துக்கு மேல ஒரே அமைதியா இருக்கே?
ReplyDeleteஇந்த பாட்டை கேட்கப்போய், அன்னையுடைய வீடியோ ஒண்ணு பார்த்தேன். இன்றைக்கு பதிவாகவே இட்டிருக்கேன்.
எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி உங்களுக்குத்தான்!
// ஆனால் 2:30 நிமிஷத்துக்கு மேல ஒரே அமைதியா இருக்கே?//
ReplyDeleteஉண்மைதான், கவி நயா மேடம். எனக்கே விடியோவை அப்லோடு செய்தபிறகுதான் கவனித்தேன். ஆனால் முழுப்பாடலும்
இருக்கிறது. ஒரு அடி கூட விட்டுப்போகவில்லை.
ஒரு வேளை அம்மனின் திருவருளால், பாடி முடிந்தபின் அவள் நினைவாகவே, ((நீங்கள் சொன்னது போல, " உன்னையன்றிடம்
ஒருவரிடம் உள்ளம் திரும்புமோ ?" ) பாடலின் சொல் நயத்தில் லயித்துப்போய் வாளா இருந்துவிட்டோனோ என்னவோ ?
தேவியின் சான்னித்தியத்தில் வார்த்தைகள் ஏது ! மெளனம் அதுவும் சிந்தை அடங்குவதுவே லட்சியம் இல்லையா ! அந்த
உணர்வு உங்கள் பாடலின் வழி வந்தது.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், என்னுடைய ஸாஃப்ட்வேரில் சாதாரணமாக, அளவுக்கு மிஞ்சிய இடத்தை ட்ரிம்
செய்ய இயலும். இதில் இப்படிச்செய்யப்போனால் முடியவில்லை.
சுப்பு ரத்தினம்.
//தேவியின் சான்னித்தியத்தில் வார்த்தைகள் ஏது ! மெளனம் அதுவும் சிந்தை அடங்குவதுவே லட்சியம் இல்லையா !//
ReplyDeleteஆம் தாத்தா! அதுதானே வேண்டும்.
ஆனா நீங்க என்னைய மேடம்னு கூப்பிடறதுதான் நல்லாவே இல்லை :(
ஐம்புலனும் அன்னையையே அனுபவிக்கும் நிலை அருமை அக்கா.
ReplyDelete//ஐம்புலனும் அன்னையையே அனுபவிக்கும் நிலை அருமை அக்கா.//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி குமரா :)