நாளும் உன்னை நினைத்தபடி
நாமஞ் சொல்லித் திளைத்தபடி
நெஞ்சில் உன்னைச் சுமந்தபடி
நேசந் தன்னை வளர்த்தபடி...
உன் னழகை ரசித்தபடி
உன் புகழை இசைத்தபடி
கண் ணெழிலில் கரைந்தபடி
புன்னகையில் புதைந்தபடி...
அம்மா என் றழைக்கையிலே
அன்பு மீறக் குழைந்தபடி
சும்மா உன் முகம்பார்க்க
வேண்டி வேண்டி விழைந்தபடி...
கொஞ்சு தமிழில் வஞ்சியுனை
கனியக் கனிய புகழ்ந்தபடி
உந்தன் பிஞ்சுப் பாதங்களை
பணிந்து பணிந்து மகிழ்ந்தபடி...
--கவிநயா
எளியச நடை.... தெளிவான பாடல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇது ஒன்று கிடைத்தால் போதுமே!
ReplyDeleteஇதயம் பெரிதாய் இன்புறுமே
அன்பே சிவமாய்க் கனிந்திடுமே
அன்னையின் திருவடி சேர்த்திடுமே!
'
//எளியச நடை.... தெளிவான பாடல் வாழ்த்துக்கள்.//
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி, திரு.கருணாகரசு.
//இது ஒன்று கிடைத்தால் போதுமே!
ReplyDeleteஇதயம் பெரிதாய் இன்புறுமே
அன்பே சிவமாய்க் கனிந்திடுமே
அன்னையின் திருவடி சேர்த்திடுமே!//
ஆம், கிருஷ்ணமூர்த்தி சார். உங்கள் வாக்கை ஆசியாகவும் எடுத்துக்கறேன். மிக்க நன்றி.
Romba alagaayum ellorum purindhu kollumpadiyum irukkirathu.
ReplyDeleteRM.Natarajan
அன்பு கவிநயா, அன்னை புவனேஸ்வரி அழகாகக் காட்சி தருகிறாள்.
ReplyDeleteஉங்கள் எளிய தமிழ் இசையைக் கேட்டுப் புன்முறுவலிப்பது போல் தோன்றுகிறது.
நன்றி திரு.நடராஜன் :)
ReplyDelete//உங்கள் எளிய தமிழ் இசையைக் கேட்டுப் புன்முறுவலிப்பது போல் தோன்றுகிறது.//
ReplyDeleteவாங்க வல்லிம்மா. மிக்க நன்றி.
படி படின்னு நீங்களும் எத்தனை தடவை தான் சொல்லுவீங்க. நான் தான் இம்புட்டு நாள் கழிச்சுப் படிக்கிறேன். :-)
ReplyDelete//நான் தான் இம்புட்டு நாள் கழிச்சுப் படிக்கிறேன். :-)//
ReplyDeleteநீங்க எப்படியும் படிப்பீங்கன்னு தெரியும் குமரன் :) அதனால உங்கள சொல்லல, எனக்கே சொல்லிக்கிட்டேன் :) வாசிச்சதுக்கு நன்றி.