மார்கழித் திங்களில் மங்கல நாளினில்
மங்கையின் பதம் பணிவோம்
கார்முகில் மேனியள் பார்வதி தேவியை
பணிந்து மனம் மகிழ்வோம்
இமையவர் வணங்கிட இமயத்தில் வசிப்பவள்
இடபவா கனனின் இடப்புறம் இருப்பவள்
சீறிவரும் சிம்மம் மீதினில் வருபவள்
கூறிவரும் பத்தர் இதயத்தில் உறைபவள்
நான்மறை அனைத்துக்கும் அடிமுடி யாம்இவள்
வானுறை சோதியள் தேன்மொழி தேவியள்
நாடிமல ரடிகளைத் தொழுதிட மகிழ்பவள்
பாடிஅவள் புகழ்சொல்ல பணித்திட்ட தாயவள்!
--கவிநயா
அனைவருக்கும் மனம் கனிந்த புது வருட நல்வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!!
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கவிநயா.
ReplyDeleteமிக்க நன்றி கைலாஷி!
ReplyDeleteமார்கழி நோன்பு என்பதே காத்யாயினி விரதம் என்று பாகவதம் சொல்லும் ஒரு நோன்பினைப் போன்றதே (அதுவே என்றும் சொல்லலாம்). அந்த மார்கழி பாவை நோன்பு காலத்தில் பாவையாம் பவானியைப் போற்றும் பாடல். நன்று. நன்று.
ReplyDeleteபார்வதி பாலாம்பிகா போல இருந்தாலும் கண்களில் கருணை வழிகிறது. சிவா மிகவும் யுவாவாக தெரிகிறார். தாமரை கண்கள். மீரா படத்தில் ஒரு கிருஷ்ண விக்ரகம் காண்பிப்பார்கள். (எம். எஸ் அறிமுகக் காட்சி.)
ReplyDeleteஅதனை நினைவூட்டும் வகையில் மிக மிக அழகு. :)
//அந்த மார்கழி பாவை நோன்பு காலத்தில் பாவையாம் பவானியைப் போற்றும் பாடல். நன்று. நன்று.//
ReplyDeleteநன்றி... நன்றி :) மார்கழியில் மட்டும் அவளை மறக்கலாமா, அதான் :)
//மிக மிக அழகு. :)//
ReplyDeleteஆமால்ல, எனக்கும் ரொம்பப் பிடிச்சுப் போன படம் இது. நீங்களும் அழகா வர்ணிச்சிருக்கீங்க :) அழகில் லயிச்சு பாடலைப் படிக்கத்தான் மறந்துட்டீங்க போல. ஆனாலும் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுட்டேன் :)
குமரன், ராதா, இருவருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகளும், வருகைக்கு நன்றிகளும் :)
ReplyDeleteஅழகான அமுதமான பாடலிதனை
ReplyDeleteஆரபியில் கேட்டு
அக மகிழ வாருங்கள்.
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com
வாங்க சுப்பு தாத்தா.
ReplyDeleteராகம் பேரெல்லாம் தெரியாதுன்னாலும், பல பாடல்கள் எழுதும்போதே ஏதாவதொரு மெட்டில் அமையும். இந்தப் பாடலைப் பொறுத்த வரை பாடல் அமைந்த மெட்டிலேயே நீங்களும் பாடியிருக்கீங்க. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தாத்தா.