Monday, March 1, 2010

போபோ என்று சொல்லி விடாதே!


வாவா அம்மா என்றழைத்தேன்
வருந்தி உன்னைத் தானழைத்தேன்
போபோ என்று சொல்லி விடாதே
பிள்ளையென்னை நீயும் தள்ளி விடாதே

(வாவா)

அலையில் அகப்பட்டு மலையில் மிதிப்பட்டு
உலையில் வதைப்பட்டு வந்தேனம்மா
அலையில் படகாக மலையில் துணையாக
உலையில் பனியாக வருவாயம்மா

(வாவா)

பிறவி பலகொண்டு விதியின் கையில்வெந்து
மதியும் மயங்கிடத் துவண்டேனம்மா
விதியை அழிவித்து மதியைத் தெளிவித்து
பிறவி தன்னைவிட அருள்வாயம்மா

பிழைகள் பலசெய்து வினைகள் தமைக்கொய்து
உளமும் வெதும்பிட வீழ்ந்தேனம்மா
களைகள் எடுத்திட்டு வினைகள் அறுத்திட்டு
மனதில்உன்னை நெய்ய அருள்வாயம்மா

(வாவா)


--கவிநயா

10 comments:

  1. பக்தி பகிர்வு நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  2. நன்றி, திரு.கருணாகரசு.

    ReplyDelete
  3. //விதியை அழிவித்து மதியைத் தெளிவித்து
    பிறவி தன்னைவிட அருள்வாயம்மா//


    அன்னையே இ்ன்னுமோர் அன்னை கருப்பையூர் வராமல் கா.

    ReplyDelete
  4. //அன்னையே இ்ன்னுமோர் அன்னை கருப்பையூர் வராமல் கா.//

    ஆமாம்.

    வருகைக்கு நன்றி கைலாஷி.

    ReplyDelete
  5. http://www.youtube.com/watch?v=dzbIbFz9-Gc

    உங்கள் குரல் ஒலிக்கக்கேட்டு அம்மா வந்துவிட்டாள்.
    வாருங்கள். கேளுங்கள்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  6. ராகம் அருமையாக பொருந்தி வந்திருக்கு தாத்தா. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. //மனதில்உன்னை நெய்ய அருள்வாயம்மா//
    அருமை அருமை.

    //போபோ என்று சொல்லி விடாதே
    பிள்ளையென்னை நீயும் தள்ளி விடாதே //
    என் சார்பாக பாடல் எழுதியதற்கு மிக்க நன்றி அக்கா. :)

    ReplyDelete
  8. //அருமை அருமை.//

    நன்றி ராதா :)

    //என் சார்பாக பாடல் எழுதியதற்கு மிக்க நன்றி அக்கா. :)//

    அப்படியா.. உங்களுக்கு புலம்பல் பாடல் பிடிக்காதுன்னு நினேச்சேனே... :)

    ReplyDelete
  9. //அப்படியா.. உங்களுக்கு புலம்பல் பாடல் பிடிக்காதுன்னு நினேச்சேனே... :)
    //
    மற்ற பேர் புலம்பினா பிடிக்காது. புலம்புவது நானாக இருந்தால் பிடிக்கும். :)

    ReplyDelete
  10. //மற்ற பேர் புலம்பினா பிடிக்காது. புலம்புவது நானாக இருந்தால் பிடிக்கும். :)//

    அது சரி... :)

    ஆனா நீங்க எப்பவும் சந்தோஷமாகவே இருக்க அன்னை அருளட்டும் :)

    ReplyDelete