Monday, April 4, 2011

ஏதும் அறியேன்...


மெய்ப்பொருள் அறியேனை, திருப்பதம் பணியேனை
விருப்புடன் ஏற்றிடு வாயோ அம்மா?
பொய்ப்பொருள் தனில்ஆழ்ந்து, வினைக்குழி தனில்வீழ்ந்து
மறுகிடும் எனைக்கண்ணால் பாராய் அம்மா

மலைபோல் துயரங்கள் எனைச்சூழ்ந் திருக்கையிலும்
மழைபோல் அழுதிருந்தேன் மங்கையுனை நினைக்கவில்லை
கடல்போல் துயரங்கள் எனைச்சூழ்ந் திருக்கையிலும்
கலங்கித் தவித்திருந்தேன் கன்னியுனை நினைக்கவில்லை

வேதங்கள் யாகங்கள் ஏதும் அறியேனம்மா
யோகமும் தியானமும் செய்யத் தெரியேனம்மா
ஏதுமறியா எனக்கும் உன்னருள் கிடைத்திடுமோ?
பதமலர் சேரும்(அ)ந்த சுகவரம் கிடைத்திடுமோ?


--கவிநயா

சுப்பு தாத்தா செஞ்சுருட்டி ராகத்தில் அமைத்து பாடியிருக்கிறார்... மிக்க நன்றி தாத்தா!

6 comments:

  1. பவானியஷ்டகத்தில் சங்கரர்

    ''நஜானாமி தானம் ந ச த்யான யோகம் '

    (தானம்,த்யானம்,யோகம் எதுவும் அறியாதவன் நான் )

    ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ர மந்த்ரம்,"

    (தந்திரம்,மந்திரம்,ஸ்தோத்ரம் எதுவும் தெரியாதவன் நான்)

    என்று அடுக்கிகொண்டே போகிறார்;அத்வைதத்தால் அகிலத்தை ஒன்றுபடுத்தியவர் இதெல்லாம் அறியாதவரா?அதனால், நமது(அஞ்ஞானிகள்) தரப்பில் விநயம் கலந்த வேண்டுகோளாக (நமக்காக )இப்படியெல்லாம் சொல்லிவிட்டு




    ''கதிஸ்த்வம்,கதிஸ்த்வம் த்வமேகாபவானி''

    (பவானி!நீயே கதி ) என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.




    உனது கடை நான்கு வரிகளைப் படித்ததும் இந்த சங்கரரின் சுலோகம் நினைவுக்கு வந்தது .

    அவரது ஸ்லோகத்தின் தாக்கத்தால் நான் எழுதிய ''கந்தா நீயே கதி ''

    என்று என் 'சர்வம் நீயே 'வலையில் பதித்த பாட்டும் நினைவுக்கு வருது.

    ReplyDelete
  2. Mrs.Lalitha Mittal said what I intended saying.
    Ultimately, it is total surrender which helps us realize His Light.

    thatha as usual sings this time in raag ehenchuritti.
    http://www.youtube.com/watch?v=3KibIgkM150

    subbu rathinam

    ReplyDelete
  3. //என்று அடுக்கிகொண்டே போகிறார்;அத்வைதத்தால் அகிலத்தை ஒன்றுபடுத்தியவர் இதெல்லாம் அறியாதவரா?அதனால், நமது(அஞ்ஞானிகள்) தரப்பில் விநயம் கலந்த வேண்டுகோளாக (நமக்காக )இப்படியெல்லாம் சொல்லிவிட்டு

    ''கதிஸ்த்வம்,கதிஸ்த்வம் த்வமேகாபவானி''

    (பவானி!நீயே கதி ) என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.//

    ஆமாம் அம்மா. அந்த சரணடைதல் கூட முழுமையாக வர மாதிரி தெரியலை :( அதுக்கும் அவளே அருளணும்.


    //அவரது ஸ்லோகத்தின் தாக்கத்தால் நான் எழுதிய ''கந்தா நீயே கதி ''

    என்று என் 'சர்வம் நீயே 'வலையில் பதித்த பாட்டும் நினைவுக்கு வருது.//

    நேரம் கிடைக்கையில் பார்க்கிறேன் அம்மா.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. //Ultimately, it is total surrender which helps us realize His Light.//

    உண்மைதான் தாத்தா. அவள் அருளால்தான் அந்த முயற்சியும் கைகூடணும்.

    உங்கள் குரலில் பாடலைக் கேட்டு மனம் நெகிழ்ந்தேன். மிகுந்த நன்றிகள் உங்களுக்கு. இடுகையிலும் சேர்த்திருக்கேன்.

    ReplyDelete
  5. //Nice akka.. :)//

    நன்றி சங்கர்.

    ReplyDelete