
வரமொன்றும் வேண்டாம் – உன்
வரவொன்றே வேண்டும்
அம்பிகை ஈஸ்வரியே – உன்னை
நம்பினேன் பார்வதியே
(வர)
திருப்பத நிழலினில் இளைப்பாற வேண்டும்
விருப்புடன் உன்றன் புகழ் தினம் பாட வேண்டும்
(வர)
நீண்ட நெடுங் கடலினில் நீந்திமிகக் களைத்திட்டேன்
மீண்டு வரும் வழியேதும் காணாமல் திகைத்திட்டேன்
மந்திரம் போலவே மங்கையுன் நினைவு தந்தாய்
தந்திர மாயெனது நெஞ்சமலர் கொய்து சென்றாய்
விந்தை யிலும் விந்தை கண்டேன்
துன்பத் திலும் இன்பம் கண்டேன்
சொந்தமென உன்னைக் கொண்டேன்
சேவடிகள் போற்றி நின்றேன்
(வர)
--கவிநயா
சுப்பு தாத்தா குரலில், இசையில், தேவகாந்தாரி ராகத்தில்... மிக்க நன்றி தாத்தா!
வரமென்றும் சாபமென்றும் தனித்தனியே ஏதுமில்லை
ReplyDeleteவரமே சாபமானதும் சாபமே வரமானதும் கதை உண்டே
வரம், சாபம் ஏதும் வேண்டேன்! திருவடிக் கீழ் தஞ்சம்
ஒன்றே வேண்டுவது!அதுவும் உன்விருப்பே!
//சொந்தமென உன்னைக் கொண்டேன்
ReplyDeleteசேவடிகள் போற்றி நின்றேன்//
Very nice akka.:)
முதல்லே வேண்டாமின்னுட்டு அடுத்த பத்திலே 'வேண்டும்'ங்கறே!நம்ம அம்மாகிட்டே நாம உரிமையா கேக்கருதலே என்ன தப்பு?அதனாலே நானும் அந்த ரெண்டாவது பத்திலே நீ கேட்டுருக்கரமாதிரி கேட்டுடப்போறேன்.
ReplyDeleteபோதுமென்றெண்ணும் பொன்மனம் வேண்டும்;
'திருப்தி'எனும் பெரும் பொக்கிஷம் வேண்டும்;
தினந்தினம் உன்முக தரிசனம் வேண்டும்;
உன்பதமலரென்னுள் மணந்திட வேண்டும்.
நான் சொல்ல வந்ததை லலிதா மித்தல் சொல்லிட்டாங்க:-)
ReplyDeleteவாங்க கிருஷ்ணமூர்த்தி சார்! நீங்க சொல்வது சரியே. எனக்கு எல்லாமே கொஞ்சம் தாமதமாதான் புரியும் :)
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி.
(அங்கேயும் இங்கேயும் வரம் பற்றியே பதிவு அமைஞ்சதை உங்க பின்னூட்டம் பார்த்த பிறகுதான் realize பண்ணினேன்)
//Very nice akka.:)//
ReplyDeleteநன்றி சங்கர்.
வாங்க லலிதாம்மா, கோபி!
ReplyDeleteயாரேனும் இப்படி சொல்லப் போறாங்கன்னு நினைச்சுக்கிட்டேதான் பதிவிட்டேன். இயல்பா வந்த வரிகளை நீக்க மனசில்லை :)
//போதுமென்றெண்ணும் பொன்மனம் வேண்டும்;
'திருப்தி'எனும் பெரும் பொக்கிஷம் வேண்டும்;//
இது ரெண்டும் ஒண்ணுதானேம்மா?
வருகைக்கு நன்றி, இருவருக்கும்.
1 ] என் வேண்டுகோளை வலியுறுத்த இருமுறை வேறு வேறு சொற்களில் வேண்டிகிட்டேன்;திருப்தி சீக்கிரமா கெடைக்கற விஷயமா?
ReplyDelete2 ]அம்மாவுக்கு நான் சொன்னது காதிலே விழுந்திருக்குமான்னு கொஞ்சம் சந்தேகம் ;அதான் .....
கீழுள்ள டைட்டில்களில் எது வேணும்னு நீ ஆப்ஷன் கேட்பது காதில் விழறது: (அ)சமாளிப்புச்சக்கரவர்த்தி (ஆ)சப்பைக்கட்டு சக்கரவர்த்தி
இதோ நான் அம்பேல்!!
ரெண்டுமே பொருத்தம் தானம்மா :)
ReplyDeleteஅம்பிகைக்கு அழகிய கவி.
ReplyDeleteமிக்க நன்றி மாதேவி.
ReplyDeleteமீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி...அற்புதம் !
ReplyDelete//மீனாக்ஷி, காமாக்ஷி, விசாலாக்ஷி...அற்புதம் !//
ReplyDeleteநீங்க படத்தை சொல்றீங்கன்னு புரிய எனக்கு சில விநாடிகள் ஆச்சு :) பாட்டு படிக்கலையா?
சுப்பு தாத்தா தேவகாந்தாரியில் பாடித் தந்ததை இடுகையில் சேர்த்திருக்கேன். எனக்கு பிடிச்ச வரியை தொடக்கமா வச்சு, மிகவும் அருமையாக பாடித் தந்த தாத்தாவுக்கு மனமார்ந்த நன்றிகளும், பணிவான வணக்கங்களும்.
ReplyDelete