Monday, April 11, 2011

அன்னையே அருந்துணையே!


அன்னையே அருந்துணையே அகிலாண்ட நாயகியே
உண்மையே உறுதுணையே உலகாளும் ஈஸ்வரியே

சரணென் றுனை அடைந்த பின்னே சஞ்சலங்கள் ஏதம்மா?
மரணம் வந்து தழுவும் போதும் நாமம் சொல்லும் நாவம்மா

உனதன்பே அனுதினமும் நான்வேண்டும் வரமாகும்
உன்நினைவே என்னோடு கூடவரும் துணையாகும்
கள்ளமில்லா பிள்ளையன்பை உன்றன்மீது தரவேண்டும்
உன்னையன்றி பிறநினைவெல்லாம் என்னைவிட்டு அறவேண்டும்

--கவிநயா

அடுத்த வாரம் முதல் விடுமுறையில் போறேன். கணினியைத் தொட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம். விடுமுறை எனக்கு, விடுதலை உங்களுக்கு! :) பிறகு பார்க்கலாம்...

அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்.

9 comments:

  1. Annai thunai eppavum irukkum.Aval anbu ellorukkum kittum.
    Natarajan.

    ReplyDelete
  2. nambiyor nalam kaakkum ambigai aval!thamizh puththaandu vazhththukkal!

    ReplyDelete
  3. //Annai thunai eppavum irukkum.Aval anbu ellorukkum kittum.
    Natarajan.//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  4. //nambiyor nalam kaakkum ambigai aval!thamizh puththaandu vazhththukkal!//

    நன்றிம்மா! உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. இமயமலை அரசன்மகள் ஆனவளும் நீ கழுவில். எண்ணாயி ரம்சமண ரைவதைத் தவளும்நீ. உமயவளு மாகியர னுடனுறை பவளும்நீ. ஓதரிய கங்கைநீ தங்கைநீ யம்மா..........

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி நிர்மலராஜ்.

    ReplyDelete
  7. விடுமுறை இனிதாய் அமையட்டும்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி மாலதி, மற்றும் மாதேவி.

    ReplyDelete