Monday, March 5, 2012
ஆடகத் தாமரையே!
சுப்பு தாத்தா பொருத்தமாக அடானாவில் பாடியிருப்பதை கேட்டுக் கொண்டே வாசியுங்கள். மிகவும் நன்றி தாத்தா!
ஆடகத் தாமரையே ஆரணங்கே அழகே!
பாடகப் பொற்பதங்கள் வணங்குகின்றோம் மயிலே!
சூடகக் கரத்தழகே சுந்தர முகத்தழகே!
நாடகப் பூவுலகை நடத்திடும் பேரழகே!
பாற்கடலில் துயிலும் பரமனின் சோதரியே!
நாற்றிசையும் புகழும் நங்கையே நாயகியே!
கூற்றுவனை உதைத்த கூத்தனின் காதலியே!
மாற்றெதுவும் இல்லா மங்கையே மாதவியே!
கனவிலும் நினைவிலும் கனிந்தஎன் கண்மணியே!
புனைவிலும் புகுந்தன்பால் பொலிந்திடும் பூவிழியே!
துணையென நீயிருந்தால் துயரங்கள் ஒருதூசே!
பிணையெனச் சொன்னாலும் பிறவியும் பெரும்பரிசே!!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://pattamangalanaadu.blogspot.com/2010/09/blog-post_8273.html
Subscribe to:
Post Comments (Atom)
கனவிலும் நினைவிலும் கனிந்தஎன் கண்மணியே!
ReplyDeleteபுனைவிலும் புகுந்தன்பால் பொலிந்திடும் பூவிழியே!
துணையென நீயிருந்தால் துயரங்கள் ஒருதூசே!
பிணையெனச் சொன்னாலும் பிறவியும் பெரும்பரிசே!!
அருமையான பரிசாய் கிடைத்த பாடல். நன்றி. பாராட்டுக்கள்..
கவிநயம் மிகுந்த கவிதையை வாசித்தபடி ஐயாவின் குரலிலும் கேட்டு ரசித்தேன்;அழகியின் திருக்காட்சி நெஞ்செல்லாம் இன்க்கிறது;நன்றி கவிநயா!
ReplyDelete//அருமையான பரிசாய் கிடைத்த பாடல். நன்றி. பாராட்டுக்கள்..//
ReplyDelete//கவிநயம் மிகுந்த கவிதையை வாசித்தபடி ஐயாவின் குரலிலும் கேட்டு ரசித்தேன்;அழகியின் திருக்காட்சி நெஞ்செல்லாம் இன்க்கிறது;நன்றி கவிநயா!//
எனக்கே பிடித்த பாடல் உங்களுக்கும் பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மிகவும் நன்றி, இருவருக்கும்.