Monday, April 1, 2013

பதியோடு பாதியாய்...



சுப்பு தாத்தா மதுவந்தியில் பாடி நம்மை மயங்க வைத்திருப்பது இங்கே.... மிக்க நன்றி தாத்தா!



அவனோடு அவளாக, சிவனோடு சிவையாக
  சரிபாதி நீயாக ஆனாய் அம்மா!
புவனமொடு ககனமாய் ககனமொடு வானமாய்
  பதியோடு பாதியாய் ஆனாய் அம்மா!

வலப்பாகம் தந்தாய்;
  இடப்பாகம் கொண்டாய்
ஒருபோதும் பிரியாமல் ஒன்றாய் அம்மா!

இருளை நீ ஏற்றாய்;
  ஒளிஅவனுக் கீந்தாய்
ஒன்றாகிப் பிரியாமல் நின்றாய் அம்மா!

நெற்றிக் கண்ணும் உன்னால்
  குளிர்ந்ததோ அம்மா?
நீள் நிலமும் உனதருளால் நனைந்ததோ அம்மா?

பற்றிக் கொண்டேன் உன்றன்
  பாதங்கள் அம்மா
வற்றாத பேரன்பைத் தருவாய் அம்மா!

அப்பனோ டம்மையாய்
  ஆன என் அம்மா
எப்போதும் எந்தையொடு அருள்வாய் அம்மா!

சித்தரும் சீவர்களும்
  சீராட்டும் அம்மா
பக்தியுடன் பாராட்டிப் பணிகின்றேன் அம்மா!


--கவிநயா


10 comments:

  1. //பற்றிக் கொண்டேன் உன்றன்
    பாதங்கள் அம்மா
    வற்றாத பேரன்பைத் தருவாய் அம்மா!//

    நானும்தான்.

    அதென்னே ககனமாய்? புரியல .

    ReplyDelete
  2. வாங்க ஷைலன். ரொம்ப நாளாக் காணும்?

    "ககனமும் வானும் புவனமும் காண" - அப்படின்னு அபிராமி அந்தாதியில் வரும். பூமிக்கும் வானுக்கும் இடைப்பட்டது என்கிற பொருளில் எழுதினேன். சரியாதான் இருக்கும்கிற நம்பிக்கையில்.

    வாசித்தமைக்கு நன்றிப்பா.

    ReplyDelete
  3. உங்களின் விளக்கமும் அருமை... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள் பல...

    ReplyDelete
  4. அர்த்தநாரீஸ்வர ஸ்வரூபமாய் அம்மையும் அப்பனும் அருளிச்செய்வதைப் போற்றும் அருமையான கவிதை. பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. நன்றி அக்கா உங்களின் விளக்கத்துக்கு!

    //ரொம்ப நாளாக் காணும்?//

    எல்லா கவிதைகளும் அப்பப்ப படித்திடுவேன். கமெண்ட்ஸ் இடுவது மாத்திரம் லேட்டா இடுவோம் என்னுட்டு சிலவேளை மறந்திடுவேன்.(ஏன்னா தமிழ் டைபிங் ரெம்ப ஸ்லொ).
    But I never miss your Amman songs.

    ReplyDelete
  6. என் அன்னை எழிலரசி!
    அவளைப்பற்றிய கவிநயாவின் பாட்டு வரிகள் எழிலலைகள்!
    அதை சுப்புசார் பாடுகையில் ஆனந்த அலைகள்!

    ReplyDelete
  7. மிக்க நன்றி, தனபாலன்!

    ReplyDelete
  8. மிக்க நன்றி பார்வதி!

    ReplyDelete
  9. தவறாமல் வாசிப்பதறிந்து மகிழ்ச்சி ஷைலன்!

    ReplyDelete
  10. மிக்க நன்றி லலிதாம்மா!

    ReplyDelete