அம்மா !ஆதரி .
காமனை எரித்த கண்ணால்
ஞானச்சேய் பயந்தளித்த
சோமேசன் ப்ரிய சுந்தரி!...மாதுரி !
அபயந்தந்தெனை ஆதரி.
கால்விரலை வாய் சுவைக்க ,
கைவிரலோ மலை சுமக்க
கோலம்பல காட்டும் அரி ...சோதரி!
சரணளித்தெனை ஆதரி !
பாமர தாசனுக்குக்
கவிபாடும் வரமளித்த
ஷ்யாமளே !சாகம்பரி !...சங்கரி !
புகல்தந்தெனை ஆதரி!
ஊமைக்குப் பேச்சருளி
ஐந்நூறு பாடவைத்த
காமாக்ஷி!கருணாகரி!...கடையனின்
பாமலரும் ஸ்வீகரி!
/// கோலம்பல காட்டும் அரி ...சோதரி!
ReplyDeleteசரணளித்தெனை ஆதரி ! ///
அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...
நெஞ்சமெல்லாம் பக்திமீதுற வைக்கும் அருமையான கவிதை. பகிர்விற்கு மிக்க நன்றி.
ReplyDelete"அம்மா !ஆதரி ."
ReplyDeleteஎன்னையும்....
அழகான கவிக்கு நன்றி அம்மா.
என்னையும் தான் , நன்றி லலிதம்மா .
ReplyDeleteவருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
ReplyDeleteதனபாலன்ஜி , பார்வதிஜி ,கவிநயா மற்றும் ஷைலன் !