Thursday, April 25, 2013

அம்மா !ஆதரி .



அம்மா !ஆதரி .

காமனை  எரித்த  கண்ணால்
          ஞானச்சேய் பயந்தளித்த 
சோமேசன்  ப்ரிய சுந்தரி!...மாதுரி !
         அபயந்தந்தெனை ஆதரி.

கால்விரலை வாய் சுவைக்க , 
          கைவிரலோ மலை சுமக்க
கோலம்பல காட்டும் அரி ...சோதரி!
         சரணளித்தெனை  ஆதரி  !

பாமர தாசனுக்குக்  
        கவிபாடும் வரமளித்த 
 ஷ்யாமளே !சாகம்பரி !...சங்கரி !
        புகல்தந்தெனை ஆதரி!

ஊமைக்குப் பேச்சருளி 
            ஐந்நூறு பாடவைத்த 
காமாக்ஷி!கருணாகரி!...கடையனின் 
           பாமலரும் ஸ்வீகரி!




         

 

5 comments:

  1. /// கோலம்பல காட்டும் அரி ...சோதரி!
    சரணளித்தெனை ஆதரி ! ///

    அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. நெஞ்சமெல்லாம் பக்திமீதுற வைக்கும் அருமையான கவிதை. பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. "அம்மா !ஆதரி ."

    என்னையும்....

    அழகான கவிக்கு நன்றி அம்மா.

    ReplyDelete
  4. என்னையும் தான் , நன்றி லலிதம்மா .

    ReplyDelete
  5. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி
    தனபாலன்ஜி , பார்வதிஜி ,கவிநயா மற்றும் ஷைலன் !

    ReplyDelete