சந்தம் ஒன்று வந்து என்றன் நெஞ்சினிலே
நின்றது நின்றதம்மா
சங்கத் தமிழினில் சிந்து ஒன்று
பாட
வந்தனம் தந்ததம்மா
ஓடி வந்த தென்றல் மூங்கில் துளை
வழி
மெட்டொன்று தந்ததம்மா
பாடி வரும் சின்னக் குயில் போலெனக்கு
பாட்டொன்று வந்ததம்மா
தேடி உன்னைக் காண நாடி வந்து
நாவில்
நர்த்தனம் செய்ததம்மா
ஆடி வரும் வண்ண மயிலைப் போல்மனம்
ஆட்டங்கள் போட்டதம்மா
துள்ளி வருகின்ற மானினம் போல்தமிழ்
துள்ளியே வந்ததம்மா
கள்ளிருக்கும் பூவைப் போலவே விரிந்து
தீங்கவி தந்ததம்மா
செல்லம் உன்னைப் போற்றிப் பாடப்
பாடமனம்
வெல்லமாய் தித்திக்குதே
கள்ளம் இல்லாப் பிள்ளை வெள்ளை
உள்ளம் எங்கும்
கள்ளூறிக் கிடக்குதே
கண்ணே கண்மணியே கற்கண்டே என்றுன்னைக்
கொஞ்சிக்கொஞ்சி மகிழ்வேன்
காலமெல்லாம் தமிழ்ப் பாக்களால்
உனக்கு
மாலைசூட்டி மகிழ்வேன்!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://blaufraustein.wordpress.com/2012/01/02/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%80/
இனிமையான ரசிக்க வைக்கும் பாடல்...
ReplyDeleteநன்றி... தொடர வாழ்த்துக்கள்...
http://www.youtube.com/watch?v=ExNui1ceoN0
ReplyDeleteஎது சரி?
ReplyDeleteoption 1)எழிலரசியைப்பாடுவதால் கவிநயாவின் வரிகளில் அழகு மேலும் கூடிவிட்டது
option 2)கவிநயாவின் வரிகளால் எழிலரசியின் அழகு மேலும் கூடிவிட்டது
விடை :1,2 (இரண்டுமே சரி!)
U have not listened to the song Madam Kavinaya as yet?
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=ExNui1ceoN0
subbu thatha.
U have not listened to the song Madam Kavinaya as yet?
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=ExNui1ceoN0
subbu thatha.