அம்மா உன்னை எண்ணும் போதே உள்ளம்
மலர்கிறதே
அறியாப் பெண்ணின் நெஞ்சம் எல்லாம்
இன்பம் நிறைகிறதே
பரிவாய்ப் பார்க்கும் உன்றன்
விழியில் பாசம் தெரிகிறதே
கனிவாய் இதழின் சிரிப்பில் இந்த
உலகே ஒளிர்கிறதே!
வருவாய் என்றே வாசல் பார்த்துக்
காத்துக் கிடக்கின்றேன்
கருவாய் உருவாய் பலவாய் ஆகி உழன்றே
தவிக்கின்றேன்
வினையின் வருவாய் குறைந்திட வேண்டும்
வேண்டிக் கேட்கின்றேன்
சுனையாய் வருவாய் அருளைத் தருவாய்
அம்மா துதிக்கின்றேன்!
மறைவாய் நீயும் நின்றாலும் நான்
உன்னை மறவேனே
மறைகள் போற்றும் பரமே உன்றன்
பதங்கள் பணிவேனே
சிலையாய் நீயும் நின்றாலும் என்
சித்தம் உன்னிடமே
மலையாய் உனையே நம்பி எனையே தந்தேன்
உன்வசமே!
--கவிநயா
அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்!
Deleteநினைவுகள் தொடர வாழ்த்துக்கள் தோழி .அன்னையின்
ReplyDeleteஅருட் கடாட்சம் இன்னும் இன்னும் நிறைவான கவிதை வரிகளை
அள்ளி வழங்கட்டும் .
பிடித்தமான வாழ்த்து :) நன்றி அம்பாளடியாள்!
Deleteஅருமை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஜனா!
Delete
ReplyDelete"சிலையாய் நீயும் நின்றாலும் என் சித்தம் உன்னிடமே
மலையாய் உனையே நம்பி எனையே தந்தேன் உன்வசமே."
அருமை.! அருமை.!!
நன்றி லலிதாம்மா.
Delete