தேஷ் ராகத்தில் சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!
கனவிலும் நினைவிலும் உன்னை நினைத்தேன் – என்றன்
சின்ன மனக் கோயிலிலே உன்னை அமைத்தேன்
இதயத் துடிப்பு உன்றன் பெயர்
சொல்லும் – இசைத்
தமிழும் அதற்கிசைந்துன் புகழ்
சொல்லும்
மதியினில் மதிமுகமே வளைய வரும்
– அது
ஸ்ருதியுடன் லயம் போலே இனிமை
தரும்
நடக்கையில் உன் நாமம் கூட வரும்
– துன்பம்
கடக்கையில் கைபிடித்துத் தாங்கி
வரும்
இடக்கையில் தீயேந்தும் அரன் மனையே
– உன்னை
நினைக்கையில் விழிகளில் நீர்
பெருகி வரும்
என்ணுகின்ற எண்ணமெல்லாம் உனதாக
பண்ணும்செய லெல்லாம் உன்றன் பணியாக
நாவுரைப்ப தெல்லாம் உன்றன் புகழாக
நானிருக்க வேண்டும் அம்மா உனக்காக…
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.trinethram-divine.com/2012/09/azhagin-azhagu-sarva-alankaram.html
வணக்கம். இந்த மாரியம்மன் ஆலயம் சிங்கப்பூர் இல்லை. மலேசியா ஜோகூர் கேலாங் பாத்தா லீமா கெடாய் என்ற ஊரில் உள்ள அம்மன். தயவு செய்து மாற்றி எழுத வேண்டாம். நன்றி.
ReplyDeleteநான் மாற்றி எழுதவில்லையே. சொல்லப் போனால் படத்திலுள்ள அம்மன் பற்றியே எழுதவில்லை. படத்தை மட்டுமே வேறொரு தளத்திலிருந்து பகிர்ந்திருக்கிறேன். நன்றி.
Delete"என்ணுகின்ற எண்ணமெல்லாம் உனதாக
ReplyDeleteபண்ணும்செய லெல்லாம் உன்றன் பணியாக
நாவுரைப்ப தெல்லாம் உன்றன் புகழாக
நானிருக்க வேண்டும் அம்மா உனக்காக!"
அழகான வரிகள்
நானும் வேண்டும் வரிகள்!
நன்றி அக்கா!
நன்றி ஷைலன். உங்களுக்குப் பிடிக்கும்னு நினைச்சேன்... :)
Delete