மலமொரு மூன்றினைக் களைவாய் வனிதே
தலமென உளந்தனில் உறைவாய் இனிதே
கலமெனைக் கருணையால் நிறைப்பாய்
கனிந்தே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே!
(9)
காமம் அனைத்தும் களைவாய் கனியே
மோகம் அனைத்தும் முறிப்பாய் முனையே*
வேகம் வந்தெமைக் காப்பாய் இமையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே!
(10)
முகத்தினில் குறுநகை தரித்திடும்
எழிலே
அகத்தினில் மலரென மணத்திடும்
அழகே
இகபர சுகமெனக் கொண்டேன் உனையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே!
(11)
முதலும் முடிவும் நடுவும் நீயே
நலமும் திறமும் சுகமும் நீயே
உயிரும் உறவும் உடலும் நீயே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே!
(12)
*முனையே == முன்னையே - கவிச்
சுவைக்காக மருவியது.
--கவிநயா
(தொடரும்)
--கவிநயா
(தொடரும்)
அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாங்க தனபாலன். நலமா? நீங்க இல்லாம, அம்மன் பாட்டு படிக்க யாருமே இல்லை... :( வருகைக்கு நன்றி!
Deleteஉனைப்பணியாவுடல் எனக்கொரு சுமையே .
ReplyDeleteஉனை இணையா உயிர்க்குடலொரு சிறையே.
மனகனிந்தென்னை அழைத்துக்கொள் சிவையே !
பொன்னார் மேனியன் சிவனின் உமையே !
.
வாங்க லலிதாம்மா. ரொம்ப நாளாச்சு பார்த்து.
Delete