ஆறுதல் கூறம்மா !
குறைமதியை மலராகச்
திருச்சிரத்தில் தரித்தவளே!
குறைமதியேன் குறைதனை நீ தீராயோ?
மறலிவருங்காலும் மனம்
'உனைக்காணல் உறுதி' என்றே
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?
பிறைசூடும் பித்தனையே
பதியாக வரித்தவளே!
திரைநீக்கித் திருக்காட்சி தாராயோ ?
முறையற்றுத் தரிகெட்டுத்
திரிந்தாடும் என் மனத்தின்
மருள் மாய்க்கும் மருந்தாய் நீ மாறாயோ
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?
கறைக்கண்டன் காயத்திலே
சரிபாதி பறித்தவளே !
நிறைகருணைக் கண்ணாலே பாராயோ?
முறையீடு முடிந்ததம்மா ,
அ(ரு)ம்புமலர்க் கரத்தவளே !
விரைந்தென்னை ஆட்கொள்ள வாராயோ?
அறிவிலிக்கு ஆறுதல் நீ கூறாயோ?
அருமை...
ReplyDeleteஅன்னையின் கருணையே நமக்கு ஆறுதல்...
வாழ்த்துக்கள்...