Monday, February 3, 2014

அன்னைக்கொரு அந்தாதி - 1

2010-ல் அன்னைக்கு 10 பாடல்கள் கொண்ட சிறய அந்தாதி ஒன்று எழுதினேன். அதனை இங்கு இட இப்போதுதான் நேரம் வாய்த்திருக்கிறது.


சுப்பு தாத்தா ராகமாலிகையில் மிக இனிமையாகப் பாடித் தந்திருக்கிறார். நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

 

காப்பு


உன்னை, உறுவினை தன்னைக் களைந்திடும் ஐங்கரனை
கன்னல் மொழிபகர் வள்ளிக் குறமகள் சண்முகனை
மன்னும் இறையொளி தன்னில் மிளிர்ந்திடும் சத்குருவை
முன்னே அடிபணிந் தன்னை மலரடி போற்றுவனே!


நூல்


உன்னும் அடியவர்க் கென்றும் அருளிடும் உத்தமியே
மன்னும் மறைபுகழ் மங்கை எனத்திகழ் மாதவியே
இன்னல் பலப்பல என்னைத் தொடரினும் ஈஸ்வரியே
உன்னை அனுதினம் உள்ளம் உருகிட ஏத்துவனே! (1)


ஏத்தும் உளந்தனில் பூத்துப் பொலிந்திடும் ஏந்திழையே
பூத்திவ் வுலகினைக் காத்துக் கரந்திடும் பூவிழியே
கூத்தன் நடமிடப் பார்த்துக் களித்திடும் பைங்கிளியே
சாத்தும் நறுமலர் ஏற்றுன் அருள்கொடு சங்கரியே! (2)


--கவிநயா

(தொடரும்)

3 comments:

  1. அருமையான பாடல்...

    வாழ்த்துக்கள்... தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  2. மிக்க நன்றி தனபாலன், ஜனா!

    ReplyDelete