நவராத்திரி நாயகிக்குப் பாமாலை
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .
[1] துர்க்கையாய்த் தாயை அலங்கரிப்போம் .
சொர்க்கமாய் வாழ்வில் சுகந்தருவாள் .
துஷ்டரை மாய்க்குந்திறமருள்வாள் .
கஷ்டங்கள் யாவுங் களைந்திடுவாள் .
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .
[2]லக்ஷ்மியாய் அன்னையை அலங்கரிப்போம் .
அக்ஷய பாத்திரமாய் அளித்திடுவாள் .
செல்வவளத்தோடு பாரியென
வள்ளல்குணமும் நமக்கருள்வாள் .
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .
[3]வாணியாய்த் தேவியை அலங்கரிப்போம் .
ஞானம் தந்து மருள் நீக்கிடுவாள்.
கலைகளில் வல்லவராக்கிடுவாள் .
நலமான வாழ்வினை நமக்கருள்வாள் .
வண்ணத்தமிழ் மலர்ச்சோலையிலே
அன்புத்தமிழ்ப் பூஞ்சொல் பறித்து ,
இன்பத்தமிழ்ப் பண்ணால் தொடுத்து ,
அன்னைக்குப் பாமாலை சாத்திடுவோம் .
No comments:
Post a Comment