Tuesday, September 16, 2014

ஒரு நாளும் உனை மறவேன்!

சுப்பு தாத்தா அடான ராகத்தில் அருமையாகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



ஒரு நாளும் உனை மறவேன் அம்மா
திருத் தாள்கள் உளம் பதித்தேன் அம்மா
(ஒரு நாளும்)

உன் நாமம் தினம் ஓதி உந்தன் புகழ் பாடிடுவேன்
ஓயாமல் உனை நினைந்தென் உள்ளத்தில் கொண்டாடிடுவேன்
(ஒரு நாளும்)

பனிமலரே உந்தன் பதமின்றி கதியேது?
கனிவிழியே உந்தன் அருளின்றி வழியேது?
மலையரசன் மகளே நீயின்றி உலகேது?
உனையன்றி துணையேதும் எனக்கிங்கு கிடையாது !
(ஒரு நாளும்)


--கவிநயா

பி.கு. பதிவிட நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தேன். இங்கு (அமெரிக்க) செவ்வாய் முடிவதற்குள்ளாகவாவது இட்டு விடத்தான்  எண்ணியிருந்தேன். அதற்குள் லலிதாம்மா இட்டு விட்டார்கள். பரவாயில்லை; நன்றி லலிதாம்மா. உண்மையில் அடுத்த வாரத்திலிருந்துதான் உங்கள் உதவி தேவை. ஊருக்குப் போவதால் இப்போது முதல் இன்னும் 4 செவ்வாய்க் கிழமைகளுக்கு பதிவிட இயலாது என நினைக்கிறேன். நன்றி அம்மா.



1 comment:

  1. மாயே !உன் மகளெனக்கு உனையன்றிப் புகலேது ?
    தாயுந்தன் தோளின்றி சேய் எனக்குச் சுகமேது ?
    இமயவளே!ஈஸ்வரியே!சக்தியின்றிச் சிவமேது ?
    உமையே !உன்னருளின்றி ஓரணுவும் அசையாது!

    ReplyDelete