உன்னை என்றும் வணங்கி வந்தேன்
உண்மை ரூபமே
உன்னைப் பாடித் தீர்த்துக் கொண்டேன்
இதய தாபமே
(உன்னை)
பச்சை மண்ணாய் என்னைத் தந்தேன்
உந்தன் கரத்திலே
இச்சை போல என்னைச் செய்வாய்
உந்தன் வரத்திலே
(உன்னை)
பெற்ற தாயே பிள்ளையை மறந்த
சரித்திரம் உண்டோ, என்னை
விட்டு விட்டால் என் தாயுனக்கே
இழுக்கா றன்றோ?
(உன்னை)
--கவிநயா
"பெற்ற தாயே பிள்ளையை மறந்த
ReplyDeleteசரித்திரம் உண்டோ, என்னை
விட்டு விட்டால் என் தாயுனக்கே
இழுக்கா றன்றோ?"
அழகான வரிகள்
எல்லா வரிகளுமே ரெம்ம்ப அருமை!
நன்றி அக்கா!
மிக்க நன்றி ஷைலன்!
Delete