அம்மா உன் பாதம் போதும்
அதுவே என் வேதமாகும்
பாதத் துளி மேலே பட்டால்
பாவமெல்லாம் தீய்ந்து போகும்
(அம்மா)
பதமலரை என் தலையில் சூடிக் கொள்ளணும்,
அந்த
மலர் பரப்பும் மணத்தில் எந்தன்
மனதை இழக்கணும்
நாளும் பொழுதும் உன்னை நினைத்து
நானும் களிக்கணும், உன்
நாமந் தன்னைச் சொல்லிச் சொல்லி
காலம் கழிக்கணும்
(அம்மா)
பதமொன்றே சதமென்று பற்றிக் கொள்ளணும்,
உன்னை
விதவிதமாய் நிதநிதமும் போற்றி
மகிழணும்
விதிசெய்யும் சதியெல்லாம் மறந்து
வாழணும்
என் மதியில் உன் மதிமுகமே நிறைந்து
ஒளிரணும்
(அம்மா)
--கவிநயா
--கவிநயா
No comments:
Post a Comment