எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!
உமையவளே உள்ளம் உறைபவளே!
இனியவளே ஈசன் இணையவளே!
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!
பகலும் இரவும், சுழலும் புவியும்
விரிந்த வெளியும், வீசும் காற்றும்
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!
பனியும் வெயிலும், பொழியும் மழையும்
அலையும் கடலும், அசையா மலைகளும்
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!
மலரும் நிறமும், மணமும் சுவையும்
உடலும் உயிரும், வாழும் வாழ்க்கையும்
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!
இருளும் மருளும், மாயை மயக்கமும்
அருளும் அது தரும் ஆன்ம ஞானமும்
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!
--கவிநயா
--கவிநயா
இருளும் மருளும், மாயை மயக்கமும்
ReplyDeleteஅருளும் அது தரும் ஆன்ம ஞானமும்
எல்லாம் உனதருளாலே!
உலகெல்லாம் உனதருளாலே!
அழகான வரிகள்
நன்றி அக்கா!
நன்றி ஷைலன்!
DeleteGood.
ReplyDeleteNatarajan.
நன்றி திரு.நடராஜன்..
Delete//எல்லாம் உனதருளாலே!
ReplyDeleteஉலகெல்லாம் உனதருளாலே!//
ஆமாம்-க்கா!
கவிதையும் உனதருளாலே
கவிநயா கவிதையும் உனதருளாலே
ரவி உனதருளாலே
ரவியுடல் பொருளாவி உனதருளாலே!
அட கண்ணனா! ரொம்ப நாளாச்சு பார்த்து...நலமா?
Deleteஅழகான பாடல்
ReplyDeleteநன்றி திகழ்!
Delete