சுப்பு தாத்தாவிற்கு மிகவும் பிடித்து விட்டதால் ஹிந்துஸ்தானி ராகத்திலும் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்! மிக்க நன்றி தாத்தா!
ஈரேழு உலகமும் ஈன்றவளே!
ஈசனுடன் இயைந்த உமையவளே!
(ஈரேழு)
(ஈரேழு)
மாசு இல்லா மனதில்
மரகதமாய் ஒளிர்வாய்!
வீசும் தென்ற லாகிவந்து
வேதனைகள் களைவாய்!
(ஈரேழு)
தேசொளிரும் தேவி!
பாசம் மிகும் தாய் நீ!
வாச மலர்ப் பாதம்
தந்தருள வா நீ!
(ஈரேழு)
--கவிநயா
//மாசு இல்லா மனதில்
ReplyDeleteமரகதமாய் ஒளிர்வாய்!
வீசும் தென்ற லாகிவந்து
வேதனைகள் களைவாய்//
அழகான வரிகள்
நன்றி அக்கா!
மிக்க நன்றி ஷைலன்!
Delete