Tuesday, October 16, 2018

காளியம்மா!




சூலமேந்தும் தாயே
காளி நீலி மாயே
கோரப் பார்வை கொண்ட போதும்
அழகு கொஞ்சும் தாயே
(சூலம்)

மயானத்தில் ஆடும் தாயே
மேடை இல்லையோ?
மண்டை ஓட்டை அணியும் தாயே
மாலை இல்லையோ?
(சூலம்)

நீதியை நிலை நாட்டவென்று
தோற்றம் கொண்டாய்
அசுரர்களை அழிப்பதற்கு
ஆத்திரம் கொண்டாய்

கோபந் தணிய பரசிவன் மேல்
பாதம் வைத்தாய்
வைத்த பாதம் எடுத்து எந்தன் மீதும்
வைப்பாய்
(சூலம்)



---கவிநயா


3 comments:

  1. வைத்த பாதம் எடுத்து எந்தன் மீதும்
    வைப்பாய்

    ReplyDelete
  2. நன்றி லலிதாம்மா, திரு.நடராஜன்.

    ReplyDelete