முத்து நகை இதழழகி; முல்லை மலர்ச் சிரிப்பழகி
முத்தமிழின் மொழியழகி; குற்றமில்லாப் பேரழகி
(முத்து)
கோடி இரதிகள் கூடினாலும், இவளுக்கு நிகராமோ
கலைமகளின் வீணை நாதம் இவள் குரலுக்கீடாமோ
(முத்து)
மன்மதனை எரித்தவனின் மனங்கவர்ந்த தேவியவள்
அயன் மால் அரி மூவருமே அடிபணியும் அன்னையவள்
பாதத் தூளியாலே இந்த அண்டமெல்லாம் ஆக்கியவள்
பாதங்களில் சரண் புகுந்தால் பரிவுடனே
காக்கிறவள்
(முத்து)
--கவிநயா
No comments:
Post a Comment