அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
அன்னையின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்!
உலகமெல்லாம் உய்ய வேணும்
உமையவளே காக்க வேணும்
சகல வித செல்வங்களும் பெருக வேணும்
சக்தி உமை நீதானே அருள வேணும்
(உலக)
உழவரெல்லாம் வாழ வேணும்
பயிர்களெல்லாம் செழிக்க வேணும்
இயற்கை யன்னை மகிழ்வோடு சிரிக்க வேணும்
இமவான் மகளே நீயே அருள வேணும்
(உலக)
உடல் நலமும் உள நலமும்
உயிர்களுக்கு நீ தரணும்
நோயில்லாத வாழ்வு இங்கு மலர வேணும்
நாராயணீ உமை நீ அருள வேணும்
(உலக)
போதும் என்ற மனதோடு
பொறுமையாக இருக்க வேணும்
பொக்கிஷமா உன் பதமே போற்ற வேணும்
புவனேஸ்வரி நீயே அருள வேணும்
(உலக)
உலகமெல்லாம் ஓர் நாடாய்
ஒற்றுமையே அதன் உயிராய்
அன்பொன்றே அதன் மூச்சாய் வாழ வேணும்
அன்னை உமை நீதானே அருள வேணும்
(உலக)
--கவிநயா
இனி அடிக்கடி வந்து வருகையை பதிவிட்டு விட்டு போகிறேன்.
ReplyDeleteஅழகான வரிகள் , நன்றி அக்கா !
மிக்க நன்றி ஷைலன்!
Delete