உன்னழகைப் பாட என் கவியால் ஆகுமோ?
உன்புகழைக் கூற செந்தமிழும் போதுமோ?
(உன்)
சின்னஞ் சிறு கவியினிலே
வண்ணத் தமிழைக் குழைத்து
பண்கள் அதில் அமைத்து
பக்தி கொஞ்சம் இழைத்து
(உன்)
கொஞ்சும் மொழி அழகு
அஞ்சும் நடை அழகு
வஞ்சியுன்றன் பாதங்களில்
கொஞ்சும் கொலுசும் அழகு
கொடியன்ன இடை அழகு
மதியன்ன நுதல் அழகு
கடலன்ன கருணை பொங்கும்
கரு விழிகள் அழகு
(உன்)
--கவிநயா
ஆடிப்பெருக்குத் திருநாளில்
ReplyDeleteஆடகமலராய்ப் பூத்த மகள்
பாடுவதெல்லாம் உன் துதியே.
ஆதியே! ஜகத் ஜோதியே!
ஆடித்தொழுவதுன் மலரடியே,
ஆடியபாதனில் பாதியே!
சீருஞ் சிறப்புமாய் அவள் வாழ
ஈரெட்டும் ஈந்தருள் தாயே!
அன்பு மகள் கவிநயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஆசிகளுக்கு மிகவும் நன்றி, லலிதாம்மா!
ReplyDelete