அடித்தாலும் அணைத்தாலும்
அடைக்கலம் நீயே
அழுகின்றேன் தொழுகின்றேன்
அம்பிகை தாயே
(அடித்தாலும்)
வினை மூட்டை தனை இறக்கி
வைத்திடும் நாள் வருமோ
விதியோடு விளையாடி
ஜெயித்திடும் நாள் வருமோ
உன்னருளை உன்னருளால்
உணர்ந்திடும் நாள் வருமோ
இதயத்திலே இன்பம்
நிலைத்திடும் நாள் வருமோ
(அடித்தாலும்)
வேண்டி வந்தேன் வாழ்வில்
ஒரு விருப்பம்
அதைத் தருவதும் மறுப்பதும்
உன் விருப்பம்
நீ நினைத்தால் எது-
வும் நடக்கும்
நம்பிக்கை வைக்கின்றேன்
அது கிடைக்கும்
(அடித்தாலும்)
--கவிநயா
பி.கு. : சில நாட்களுக்கு ஒரு சிறிய இடைவேளை; அதற்குப் பிறகு தொடருகிறேன். அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்.
அழகான வரிகள் , நன்றி அக்கா .
ReplyDeleteபின்குறிப்புக்கு நன்றி , மீண்டும் தொடர எதிர்பார்த்துஇருக்கிறேன் .
நன்றி தம்பி. எதிர்பார்ப்பிற்கும் நன்றி :)
Delete