
ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
(உலக அன்னையே; கிளியை ஏந்தியவளே; மங்கலவடிவினளே)
சுகஸ்வரூபினி மதுரவாணி(கிளியைப் போன்று அழகானவளே; இனிய குரலை உடையவளே)
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி (ஜகத் ஜனனி)
பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
சங்கரி (ரஞ்சனி) பரமேஸ்வரி(பாண்டிய இளவரசி; சிவனின் அரசியே; அம்மா; சிவன் மனத்தை மகிழ்விப்பவளே; பரமேஸ்வரனின் பாதியே)
வேண்டும் வரம் இன்னும் மனம் இல்லையோ
வேதவேதாந்த நாத ஸ்வரூபினி (ஜகத் ஜனனி)(வேத வேதாந்த இசை வடிவினளே)
இராகம்: ரதிபதிப்ரியா
தாளம்:ஆதி
இயற்றியவர்: கானம் கிருஷ்ண ஐயர்
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், விசாலாக்ஷி நித்யானந்த்
இசைத்தவர்கள்: குன்னக்குடி வைத்தியநாதன், என்.ரமணி