Monday, March 26, 2007

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி


ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
(உலக அன்னையே; கிளியை ஏந்தியவளே; மங்கலவடிவினளே)

சுகஸ்வரூபினி மதுரவாணி(கிளியைப் போன்று அழகானவளே; இனிய குரலை உடையவளே)
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி (ஜகத் ஜனனி)
பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
சங்கரி (ரஞ்சனி) பரமேஸ்வரி
(பாண்டிய இளவரசி; சிவனின் அரசியே; அம்மா; சிவன் மனத்தை மகிழ்விப்பவளே; பரமேஸ்வரனின் பாதியே)
வேண்டும் வரம் இன்னும் மனம் இல்லையோ
வேதவேதாந்த நாத ஸ்வரூபினி (ஜகத் ஜனனி)
(வேத வேதாந்த இசை வடிவினளே)

இராகம்: ரதிபதிப்ரியா
தாளம்:ஆதி
இயற்றியவர்: கானம் கிருஷ்ண ஐயர்
பாடியவர்கள்:
உன்னிகிருஷ்ணன், விசாலாக்ஷி நித்யானந்த்
இசைத்தவர்கள்:
குன்னக்குடி வைத்தியநாதன், என்.ரமணி

13 comments:

  1. இந்தப் பாட்டு,முதலில் வேறுயாரோ பாடி இருப்பார்கள் குமரன்.
    ஜி என் பி. யா
    இல்லை வேறு யாராவதா தெரியவில்லை.
    கேட்க மிகவும் இனிமையாக இருக்கும்.

    மனதைப் பாண்டியகுமாரியிடம் இழுக்கும் பாட்டு.

    ReplyDelete
  2. //இராகம்: ரதிபதிப்ரியா//

    அட நம்ம மன்மதன் மேல கூட ஒரு ராகம் இருக்கா?
    இனி எல்லா இளைஞர்களும் இந்த ராகத்திலேயே பாட வேண்டியது தான் :-))))

    நல்ல பாடல் குமரன்.
    யார் எழுதியது??

    ReplyDelete
  3. வல்லி அம்மா. ஜி.என்.பி. இந்தப் பாடலைப் பாடியிருக்கும் பாடலின் சுட்டி கிடைக்கவில்லை. நான் முதன்முதலில் இந்தப் பாடலைக் கேட்டது உன்னிகிருஷ்ணன் குரலில்.

    ஆமாம். மனதை மீனாட்சியம்மையிடம் எளிதில் சேர்க்கும் பாடல் இது.

    ReplyDelete
  4. ஆமாம் இரவிசங்கர். நானும் நினைத்துக்கொண்டேன் மன்மதனை. :-)

    யார் எழுதியது என்று தேடி இடுகையிலும் இட்டுவிட்டேன் இரவி.

    ReplyDelete
  5. மிகவும் நல்ல பாடல்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  7. தற்போதுதான் இந்த பதிவினை கவனித்தேன். அருமை...நன்றி குமரன்.

    ReplyDelete
  8. இந்தப் பாட்டை வேறு யாருமில்லை, எம்.எம்.தண்டபாணி தேசிகர் மிக அருமையாகப் பாடியிருக்கிறார். ரிகார்ட் கிடைத்தால் கேட்டுப்பாருங்கள்.
    சகாதேவன்.

    ReplyDelete
  9. நன்றி சகாதேவன். திரு. தண்டபாணி தேசிகர் பாடிய பாடலின் சுட்டி கிடைத்தால் தாருங்கள்.

    ReplyDelete
  10. ரொம்ப அழகான பாட்டு இது.

    thanks for the links.
    Kunnakudi and Ramani is great.

    ReplyDelete
  11. இக்கீர்த்தனை எம்.எம.தண்டபாணி தேசிகர் பாடியதுதான் ஆகச்சிறந்தது.

    ReplyDelete