சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)
மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)
இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடி எல்லோரும் கேட்டிருப்போம். இணையத்தில் அவர் பாடியது கிடைக்கவில்லை. யாரிடமாவது சுட்டி இருந்தால் தாருங்கள்.
இராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி
இயற்றியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடியவர்: விஜயலக்ஷ்மி நித்யானந்த்
சிவகங்கை குளத்தருகே ச்ரி துர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)
மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள் (சின்னஞ்சிறு)
இந்தப் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடி எல்லோரும் கேட்டிருப்போம். இணையத்தில் அவர் பாடியது கிடைக்கவில்லை. யாரிடமாவது சுட்டி இருந்தால் தாருங்கள்.
இராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி
இயற்றியவர்: உளுந்தூர்பேட்டை சண்முகம்
பாடியவர்: விஜயலக்ஷ்மி நித்யானந்த்
**
சீர்காழியார் பாடியது இன்று (28 Sept 2011) கிடைத்து இணைத்திருக்கிறேன்.
குமரன்
ReplyDeleteஇதோ சீர்காழியார் பாடும் சுட்டி-Real Player
//பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது//
ஆகா...கண்ணால் கடாட்சிக்கும் கண்ணாள் - எவ்வளவு அழகான வரிகள்!
சீர்காழியார் பாடலின் சுட்டிக்கு நன்றி இரவிசங்கர்.
ReplyDeleteகுமரன் சின்னஞ்சிறு பெண் போலே பாடலை நினைவுபடுத்தியடறகு நன்றி. அருமையான பாடல்..ரிபிட்-ல போட்டுட்டு 1-மணீ நேரம் கேட்டேன்.
ReplyDeleteவாங்க ஈரோட்டு பீம்பாய். பாடலைக் கேட்டு இரசித்தீர்களா? மிக்க மகிழ்ச்சி. நீங்க சொன்னதைப் படிச்ச பிறகு நானும் ஒரு தடவை பாட்டைக் கேட்டேன். :-)
ReplyDeleteஅருமையான பாடல்.
ReplyDeleteநன்றி கார்திக்வேலு
ReplyDeleteகுமரன் + ரவி,
ReplyDeleteபாதிவை படித்து பின் சீர்காழி பற்றி சொல்ல வந்தால் முதல் பின்னூட்டமே அது தான். நன்றி.
நன்றி மௌலி ஐயா.
ReplyDeleteஅருமையான பாடல்..
ReplyDeleteநன்றி மங்கை.
ReplyDeleteஇப்பதிவு இத்தனைநாட்கள் ஏன் அனுப்பவில்லை அண்ணா?
ReplyDeleteசரி சரி இன்றாவது தெரிந்ததே மிக்க மகிழ்ச்சி.
இந்தப் பதிவைப் பற்றி ஒரு முறை சொன்னேன் என்று தான் நினைக்கிறேன் சிவமுருகன். இந்தப் பதிவில் இந்த இடுகை மட்டுமே நான் இட்டது. அதனால் சொல்லாமல் விட்டிருக்கவும் வாய்ப்புண்டு. மற்ற இடுகைகளையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். நல்லது. அவை எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன இல்லையா?
ReplyDeleteare you get a song if you want cotact this no kks.senthu@yahoo.com
ReplyDeletehttp://www.youtube.com/watch?v=bEH4G1A8P8I
ReplyDeleteரொம்பப் பிடித்த பாடல். நன்றி குமரா!
ReplyDeleteநன்றி அக்கா. நீங்கள் இன்று பின்னூட்டம் இட்டதால் இந்த இடுகையை இன்னொரு முறை பார்த்து சீர்காழியார் பாடியதையும் இணைத்துவிட்டேன்.
ReplyDeleteThanks for the link Ultimate. Did not notice your comment until today. Sorry.
ReplyDeleteசீர்காழியார் கணீர்குரல் செவிவளி சென்று சிந்தையை மயக்குகிறது .... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
ReplyDelete