Thursday, July 24, 2008

ஆடி வெள்ளி - மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா!

K வீரமணி - LR ஈஸ்வரி.....நாடி நரம்பு எல்லாம் புடைக்க...கண்கள் கசிய...ரோட்டோரம் உள்ள எளிமையான மனிதனையும் பக்தியால் திகைக்க வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்கள்!

தமிழகம் முழுவதும் உள்ள அம்மனின் பேர்களையும், அவள் இருக்கும் ஊர்களின் பேர்களையும், ஒவ்வொன்றாய் பட்டியல் இடும் பாட்டு - நீங்கள் எல்லோரும் கேட்டு மயங்கி இருப்பீர்கள்!
அதை இன்று, இந்தப் பதிவில், எழுத்து/ஒலி வடிவிலும் கேட்டு இன்புறுங்கள்!

இன்று ஆடி வெள்ளி, இரண்டாம் வெள்ளி!
கிராமம்-நகரம் என்று பாரபட்சம் இல்லாது எங்கும் நிறைந்திருக்கும் ஆத்தா மகமாயி...ஏழை எளியோரின் தெய்வம்!
பார்ப்பதற்கு மூடத்தனம் என்று சில பேருக்குத் தோன்றும்! ஆனால் பொங்கலும், கூழும், குலவையும், வேப்பிலையும், தீமிதியும்...
தமிழகத்தின் ஒட்டுமொத்த எளிய மக்களின் வாழ்வைக் காட்டும் கண்ணாடி. அவர்கள் வாழ்விலும், குடும்பங்களிலும் உள்ள ஒரே பற்றுதல்!

கண்ணன் கீதையில் சொன்னது - ஒரு சிறு இலையாவது முழு மனத்துடன் அர்ப்பணிப்பவரைக் காத்து ரட்சிப்பேன் என்பது!
அவன் தங்கை மாயி மகமாயிக்கும் அஃதே இலை - அதுவே வேப்பிலை!

இலை கூட உனக்குக் கிடைக்க வில்லையா?
சரி...தண்ணீர் கிடைக்குமே!
தண்ணீர் கிடைக்க வில்லை என்று....யாரும், எங்கும், எப்போதும் சொல்லவே முடியாதே!
கண்ணன் உறுதியாகச் சொல்கிறான்! உன் கண்களில் ரெண்டு சொட்டாவது இருக்குமே தண்ணீர்! அதை அர்ப்பணி! இதோ அர்ப்பணிக்கிறார் K. வீரமணி!

பாடலைக் கேட்டு பரவசமாக வேண்டுமா? இதோ சுட்டி!
(Currently playing என்று சொன்னாலும்..அந்த "நெறஞ்சு மனசு" சுட்டியைச் சுட்டுங்கள்...It opens the player with an advt first and then the song!)

நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி - உன்னை
நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி!
மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி
கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி!
நமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி - கண்
இமை போல காத்திடுவாள் மகமாயி!
உமையவள் அவளே இமவான் மகளே
சமயத்தில் வருபவள் அவளே - எங்கள் சமயபுரத்தாள் அவளே!

இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி!
தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி!
முந்தை வினைகளைக் களைந்தெறிவாள் தாய் மயிலையிலே, முண்டகக்கன்னி - கோலவிழி பத்திரகாளி!
வேண்டும் வரம் தருவாள் என் தாய்....வேற்காட்டுக் கருமாரி!



ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்
பாத்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி
நார்த்தமலை வாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி

நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா நிம்மதியைத் தந்திடுவா
வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்த வினை தீர்த்திடுவா
மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாச் சிரிச்சு நிப்பா
தஞ்சம் என்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா

மல்லிகைச் சரம் தொடுத்து மாலை இட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் இட்டோம் - அம்மா
துள்ளியே எந்தன் முன்னே வாரும் அம்மா - அம்மா
தூயவளே எந்தன் தாயீ மாரியம்மா!


பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப்
பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்


உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே!
எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் - மற்ற அந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா?கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா! காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!


இந்தச் சின்னவனின் குரல்கேட்டு முகம் திருப்பு - அம்மா
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு! - அம்மா
கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும் - அம்மா
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!

பண்ணமைக்கும் நாவுனையே பாட வேண்டும் - அம்மா
எல்லோரும் பக்தியுடன் கையெடுத்து உன்னையே கும்பிட வேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையது ஆக வேண்டும்!





திருவேற்காடு


சமயபுரம்

மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா
மண்ணளக்கும் தாயே குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா
மா மதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா


விருதுநகரிலே முத்துமாரியம்மா
சிவகாசியிலே பத்திரகாளியம்மா
வீரபாண்டியிலே கெளமாரியம்மா
தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா
இருக்கன்குடியிலே மாரியம்மா
செந்தூரிலே சந்தன மாரியம்மா
ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா
பெருங்கரையிலே சதுரங்கநாயகியம்மா

சிவகங்கையிலே வெட்டுடையார் காளியம்மா
திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா
மணப்பாறையிலே முத்துமாரியம்மா
திருச்சியிலே சமயபுரத்தம்மா வெக்காளியம்மா
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

மண்ணளக்கும் தாயே....
தஞ்சையிலே புன்னை நல்லூர் மாரியம்மா
குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா
வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா



தஞ்சை

வேளாங்கண்ணி

நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
வேளாங்கண்ணியிலே வேளங்கண்ணியம்மா
திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா
எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா

ஆரூரிலே சீதளாதேவி எல்லம்மா
பட்டுக்கோட்டையிலே நாடியம்மா
அறந்தாங்கியிலே வீரமா காளியம்மா
திருவப்பூர் மாரியம்மா
கொண்ணையூர் மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா
கண்கொடுக்கும் தெய்வமே - நாட்டரசன்கோட்டை வாழும் என் கண்ணாத்தா!

மண்ணளக்கும் தாயே....
படவேட்டிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரியம்மா
வெட்டுவானம் எல்லையம்மா
செங்கையிலே மனப்பாக்கம் கன்னியம்மா
செங்கையிலே நாகாத்தம்மா

மண்ணளக்கும் தாயே....
சென்னையிலே மயிலையிலே அருள்மிகு தேவி முண்டகக் கண்ணியம்மா
கோலவிழி பத்ரகாளியம்மா
அல்லிக்கேணியிலே எல்லம்மா
புரசையிலே பாதாள பொன்னியம்மா
மாம்பலத்திலே முப்பாத்தம்மா
வடசென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

மண்ணளக்கும் தாயே....
சேலத்திலே அன்னதான மாரியம்மா
ஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா
கோவையிலே தண்டுமாரியம்மா கோணியம்மா
சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

மண்ணளக்கும் தாயே....
வடநாட்டிலே காசி விசாலாக்ஷியம்மா
வங்காளத்திலே காளியம்மா
விஜயவாடாவிலே கனக துர்க்கையம்மா
கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி சாரதாம்பி்கே மூகாம்பிகையம்மா
தங்கவயலிலே கங்கையம்மா

மண்ணளக்கும் தாயே....
கேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதியம்மே
கொடுங்கல்லூர் பகவதியம்மே

மண்ணளக்கும் தாயே....
மலேசிய நாட்டிலே மகா மாரியம்மா
சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா


மலேசியா-ஜோஹர் பாரு


சிங்கப்பூர்

இவையனைத்தும் ஒன்று சேர்ந்த சக்தி சொரூபமே -
அம்மா திருவேற்காட்டில் வாழ்.....
கனவிலும் நினைவிலும் இவன் தொழும்
என் சத்திய தெய்வமே....கருமாரியம்மா.....கருமாரியம்மா.....
இந்த மகனுடைய குறைகளையும் கவலைகளையும் தீரடியம்மா
அம்மா அம்மா அம்மா....அம்மா

அம்மா...
கற்பூர நாயகியே கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா.....
..
..
..
என்று வேறு மாதிரி இப்போது தொடரும்! பெரீய்ய்ய்ய்ய்ய பாடல்!
அன்புத்தோழி, அப்படித் தொடரும் பாட்டை முந்தைய பதிவுகளில் போட்டாங்க. இதோ சுட்டிகள்! 1 2 3

இன்னமும் தொடரும்...
திருவேற்காட்டில் அன்னைக்கு மந்திரம் முழங்க, குலவை ஒலிக்க, பாடல் தொடர்கிறது...
முடிந்தால் அதை அடுத்த வெள்ளிக்கிழமை இடுகிறேன்!
மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா!
பாதாள பொன்னியம்மா! - வாழைப்பந்தல் பச்சையம்மா! நின் தாள் சரண்!

18 comments:

  1. அதுக்குள்ள போட்டாச்சா? சரி தான். படிச்சுப் பாக்குறேன். :-)

    ReplyDelete
  2. நெஞ்சைத் தொட்டுச் செல்லும் வரிகள் பல இருக்கின்றன இந்தப் பாட்டில் இரவிசங்கர்.

    ReplyDelete
  3. எத்தனை நாளாச்சு இந்த பாட்டு கேட்டு. எங்க ஊர் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் ஞாபகம் வந்துருச்சு. வெள்ளி, வெள்ளி, அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கும், கிட்டத்தட்ட ஆயிரம் லிட்டர் பால் வரும். பங்குனி முத்தாலம்மன் திருவிழா, சித்திரை சுந்தரராஜப் பெருமாள் திருவிழா, வைகாசி பேரருளாளன் வரதராஜனுக்கு திருவிழான்னு 3 மாசமும் ஒரே கொண்டாட்டம் தான்.

    ரவி அண்ணா, உங்களுக்கு எத்தனை முகம்னு கண்டுபிடிக்கவே முடியாதுன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. என்ன குமரன்...அதுக்குள்ள போட்டாச்சா-ன்னு கேக்குறீங்க?

    உங்களை முந்திக்கிட்டு போடணும்னு தான் அவசரம் அவசரமா ஆடி வெள்ளிப் பதிவு போட்டேன்! :)

    ReplyDelete
  5. உண்மை குமரன்...
    நெஞ்சை நேரடியாகத் தொடும் பாடல் வரிகள் தான் மாரியம்மன் பாடல்கள்!
    எளிய கிராமத்துப் பாட்டல்லவா?

    நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி ன்னு அந்த நெறஞ்சு-ல அழுத்துவாரு பாருங்க! மனசே நெறஞ்சுடும்!

    ReplyDelete
  6. @ராகவ்
    //
    ரவி அண்ணா, உங்களுக்கு எத்தனை முகம்னு கண்டுபிடிக்கவே முடியாதுன்னு நினைக்கிறேன்.//

    ஆறு முகம் ஆன பொருள் நீ அருள வேண்டும்
    ஆதி மலை சேஷ மலை அமர்ந்த பெருமாளே!
    :))

    ReplyDelete
  7. கன்னத்துல போட்டுகிட்டேன்!

    ReplyDelete
  8. பாட்டை கேட்க முடியல இப்ப. ஆனா படிச்சேன். மிக்க நன்றி கண்ணா.

    சமயபுரத்தாள் அடிகள் சரணம் சரணம்.
    கருமாரி கண்பார்க்க வரணும் வரணும்.

    ReplyDelete
  9. சொன்னபடி வந்து இரண்டாம் வெள்ளியை நிறைவு செய்தமைக்கு நன்றி ரவி!

    அருமையான இரு பாடல்கள்!

    கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல்கள்!

    ReplyDelete
  10. சமயபுரம் மாரியம்மன் கொள்ளை அழகு. குஷ்பு கூட ஒரு படத்துல எல்லா அம்மன் பேர் வர்ற மாதிரி சித்ரா பாடினதுக்கு நல்லா வாயசைச்சிருப்பாங்க. "தாலி வரம் கேட்க வந்தேன்" பாட்டுன்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  11. //நாமக்கல் சிபி said...
    கன்னத்துல போட்டுகிட்டேன்!
    //

    யார் கன்னத்துல சிபி அண்ணா? :)

    ReplyDelete
  12. //கவிநயா said...
    பாட்டை கேட்க முடியல இப்ப. ஆனா படிச்சேன். மிக்க நன்றி கண்ணா.
    //

    அக்கா,
    சாரி, மீ தி லேட்!
    பாட்டு கேக்குதே!
    1 click the link..
    2 it open a new window with "neranja manasu" link!
    3 click it again!
    4 It opens the player with an advt first and then the song!)

    ReplyDelete
  13. //VSK said...
    சொன்னபடி வந்து இரண்டாம் வெள்ளியை நிறைவு செய்தமைக்கு நன்றி ரவி!//

    மூனாம் வெள்ளியில் பதில் சொல்லுறேன் பாத்தீங்களா? :)

    அடுத்த வாரத்துக்கு இப்பவே துண்டு போட்டுக்கறேன் SK ஐயா! :)

    ReplyDelete
  14. //சின்ன அம்மிணி said...
    சமயபுரம் மாரியம்மன் கொள்ளை அழகு//

    எங்க வேளாங்கண்ணி அம்மனும் தான் கொள்ளை அழகு! :)

    //குஷ்பு கூட ஒரு படத்துல எல்லா அம்மன் பேர் வர்ற மாதிரி சித்ரா பாடினதுக்கு நல்லா வாயசைச்சிருப்பாங்க. "தாலி வரம் கேட்க வந்தேன்" பாட்டுன்னு நினைக்கிறேன்//

    அதே அதே!
    அடுத்த வாரம் போட்டுருவமா அக்கா? :)

    ReplyDelete
  15. ennavendru solvathu ...
    solla vaarthaikale illai ..

    ReplyDelete