Monday, April 23, 2007

கருமாரி அம்மன் பாடல்1


எனக்கு பிடித்த இந்த கருமாரி அம்மன் பாடலிலுள்ள ஒன்பது பத்தியில் மூன்று மூன்றாக மூன்று நாட்கள் எழுதவிருக்கிறேன்.

நன்றி


கற்பூர நாயகியே ! கனகவல்லி,
காளி மகமாயி கருமாரியம்மா,
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா,
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா,
விற்கோல வேதவல்லி விசாலாட்சி,
விழிகோல மாமதுரை மீனாட்சி,
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே,
சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே (கற்பூர நாயகியே)

புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி,
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி,
நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி,
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி,
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி,
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி,
உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி,
உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி (கற்பூர நாயகியே)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறவிடத்தில் முறையிடுவேன் தாயே ! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற,
அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா,
கண்ணீரை துடைத்து விட ஓடிவாம்மா,
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா,
சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு,
சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு (கற்பூர நாயகியே)

3 comments:

  1. அன்புத் தோழீ
    பாடலின் சுட்டி இதோ
    http://www.musicindiaonline.com/p/x/aUK98RXn1t.As1NMvHdW/

    ஆனா இந்தப் பாடலில் LR ஈஸ்வரி வேறு விதமாகப் பாடுகிறார்கள்!
    மண்ணளக்கும் தாயே என்று வருமே, அதைத் தானே நீங்கள் இடப் போகிறீர்கள்?

    ReplyDelete
  2. ஆனால் இந்த சுட்டியில் பாட்டு பாதி பாதியாகவும், அங்குமிங்குமாக வருகிறது. எந்த பாட்டிலுமே பாடல் முழுதாக வராததால் தான் நான் சுட்டியே வைக்கவில்லை. மன்னிக்க வேண்டும் KRS

    ReplyDelete
  3. பலமுறை என் குழந்தைகளுக்கு தாலாட்டாகப் பாடிய பாடல் இது அன்புத்தோழி. உணர்வுபூர்வமான ஆழ்ந்த பொருள் கொண்ட பாடல் இது.

    ReplyDelete