Monday, November 10, 2008

அவளின்றி ஓரணுவும் அசையாது !



அவளின்றி ஓரணுவும் அசையாது
அவள்அன்பின்றி ஓருயிரும் தரியாது
பகலிரவும் அவளின்றி மாறாது
புவியிதுவும் அவள்சொன்னால் சுற்றாது

அன்பாலே ஆனஎன் அன்னை அவள்
அன்புக்கு எல்லையென்றே எதுவும் இல்லை
சரணென்று பணிந்தோரை ஏற்பாள் அவரை
கண்ணுக்குள் மணிபோலே கணந்தோறும் காப்பாள்

தாயாக மகளாக வருவாள் அவள்
தடையேதும் சொல்லாமல் அன்பள்ளித் தருவாள்
அன்புமிகு சோதரியும் ஆவாள் அவள்
என்றுமெனைப் பிரியாத ப்ரியசகியும் ஆவாள்

எல்லாமே அவளென்று ஆனாள் அவளை
சொல்லெடுத்துப் பாடிடவே தமிழெனக்குத் தந்தாள்
என்னவளை என்றென்றும் மறவேன் அவளின்
புகழ்பாடி துதிபாடி மகிழ்ந்தென்னை மறப்பேன்!


--கவிநயா

13 comments:

  1. மீ தி பர்ஷ்ட்டே! :)

    //பகலிரவும் அவளின்றி மாறாது
    புவியிதுவும் அவள்சொன்னால் சுற்றாது//

    வரவர பாரதியார் மாதிரி போல்ட்டா மிரட்டறீங்க-க்கோவ்! :)

    அம்மன் பாட்டில் சொந்தக் கவிதையால் அபிஷேகம் செய்து கொள்ள அவள் முடிவெடுத்து விட்டாள்!
    அதை நூறாக்கி கொண்டாடாது ஓட, யார் அவளை விட்டாள்?

    அம்மா
    யாம் உனைத் தொடர்ந்து
    சிக்-எனப் பிடித்தோம்
    எங்கு எழுந்து அருளுவது இனியே?

    ReplyDelete
  2. //தாயாக மகளாக வருவாள் அவள்
    தடையேதும் சொல்லாமல் அன்பள்ளித் தருவாள்
    அன்புமிகு சோதரியும் ஆவாள் அவள்
    என்றுமெனைப் பிரியாத ப்ரியசகியும் ஆவாள்//

    உண்மை, கருணையின் வடிவமாய் மட்டுமின்றி அன்பின் உருவமாயும் நம்முடனே இருப்பாள்.

    //சொல்லெடுத்துப் பாடிடவே தமிழெனக்குத் தந்தாள்//

    ஆமாங்க அது உங்கள் பாடல்களில் துள்ளி விளையாடுவதிலேயே தெரிகிறது.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கண்ணனைக் காணும்னு அறிக்கை விடலாம்னு இருந்தேன் :) வருகைக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  4. வாங்க ராமலக்ஷ்மி. நான் கவிதை எழுத ஆரம்பிச்சதே அவளைப் பாடுவதற்காக எடுத்த பயிற்சிதான்னு தோணும். அதான் அப்படி சொன்னென் - கர்வத்தினால இல்ல :). நீங்களும் அப்படி சொல்லல, ஆனா சிறு தன்னிலை விளக்கத்துக்கான வாய்ப்பா இதை பயன்படுத்திக்கிட்டேன், அவ்ளோதான். இறுதி வரை அவளைப் பாடிக் கொண்டிருக்க வேணும். அவளருளாலே அவள் தாள் வணங்கி... வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள் உங்களுக்கு.

    ReplyDelete
  5. //என்னவளை என்றென்றும் மறவேன் அவளின்
    புகழ்பாடி துதிபாடி மகிழ்ந்தென்னை மறப்பேன்!//

    ரீப்பீட்டே...

    ReplyDelete
  6. வரிகள் எல்லாம் அருமை.

    அடிக்கடி எனக்கு இறையுணர்வு ஊட்டுவதற்கும் நன்றி.

    ReplyDelete
  7. நல்ல பொருளுள்ள பாடல் அக்கா.

    ReplyDelete
  8. //கண்ணுக்குள் மணிபோலே கணந்தோறும் காப்பாள்//

    அன்னையே சரணம், அன்னையே சரணம்.

    நாளை (12/11/08) அன்னபூரணியை வாம பாகத்திலே கொண்ட ஐயனுக்கு அன்னாபிஷேகம், ஒரு பதிவிட ஐயன் உத்தரவு வந்து தரிசனம் பெறவும்.

    ReplyDelete
  9. வாங்க மௌலி. ரிப்பீட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  10. வாங்க நிர்ஷன். உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. ரசித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி குமரா.

    ReplyDelete
  12. வாங்க கைலாஷி. அவசியம் வந்து தரிசிக்கிறேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. சதமடித்ததற்கு வாழ்த்துக்கள்.

    கவிநயா, மீனாட்சி, கேயாரஸ் - ஒரு நல்ல இன்னிசை அனுபவம் தந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete