உன்னை விட்டால் போக்கிடம் ஏது? - உன்
நிழலை விட்டால் எனக்கு
புகலிடம் ஏது?
(உன்னை)
கண்ணை விட்டு நீங்காத
கற்பகமே அற்புதமே
கருத்தினில் உன்னை வைத்தே
பற்றினேன் உன்பொற்பதமே
(உன்னை)
பொன்னை விட்டே உந்தன்
புன்னகையைத் தேடுகிறேன்
பொருளை விட்டே உந்தன்
அருளையே நாடுகிறேன்
(உன்னை)
பின்னமிட்ட வாழ்வை விட்டு
உன்னை எண்ணிப் பாடுகிறேன்
என்னை விட்டு அகலாமல்
நீ இருக்க வேண்டுகிறேன்
(உன்னை)
--கவிநயா
http://uk.youtube.com/watch?v=VSJ2V5EzW-w
ReplyDeleteஇந்தப்பாடலை சாமா, சிந்து பைரவி மற்றும் சஹானா ராகங்களில் பாட முடிகிறது. சிந்து பைரவியில் செய்த முயற்சி
மேலே உள்ள சுட்டியில் அமைந்திருக்கிறது.
சாமா ராகத்தில் பாடிய வீடியோவை யூ ட்யூபில் மேலோட்டம் ( upload)
செய்யும்போது இது ட்யூப்ளிகேட் என்று ரிஜக்ட் செய்து விட்டது.
அதை எனது பதிவில் நேரடியாக பதிவு செல்ல இயலுமா என முயல்கிறேன்.
சுப்பு ரத்தினம்.
அருமையாக இருக்கு சுப்பு தாத்தா. மிக்க நன்றி.
ReplyDeletefollow-up -க்காக இது...
ReplyDeleteஉண்மைதான் அக்கா வேறு போக்கிடம் இல்லை தான்...
ReplyDeleteவாங்க மௌலி. உங்களுக்கும் எனக்கும் தெரியுது. அவளுக்குத்தான் தெரிய மாட்டேங்குது :(
ReplyDelete