Thursday, January 15, 2009

மனசுக்குள்ள குடிசை கட்டி...





மனசுக்குள்ள குடிசை கட்டி
மாக்கோலம் போட்டு வச்சேன்

மாவிலயத் தொங்க விட்டு
மல்லியப்பூ தொடுத்து வச்சேன்

அச்சு வெல்லந் தட்டிப் போட்டு
பச்சரிசி பொங்க வச்சேன்

அகல் வெளக்க ஏத்தி வச்சு
ஆத்தா ஒனக்கு அழப்பு வச்சேன்

மனசுவச்சு நீயும் வரணும்
மகளுக்கு ஒன் அன்பத் தரணும்

சின்னக் குடிசையின்னு நீயும்
செரமம் பாக்காம வரணும்



--கவிநயா

16 comments:

  1. சின்ன வயசுல ஒரு பாட்டு கத்துக்கிட்டேன் கவிநயா அக்கா.

    ஓம் ச்ரி மாதா ச்ரி சக்ரேஸ்வரி
    ஐங்கரன் ஆறுமுகன் ஜனனி
    ஹ்ரீம்காரக் கூட்டின் இளங்கிளியே
    உயர் ஓம்காரச் செல்வியே லலிதாம்பா

    கற்பக மரம் சூழ் பூங்காவினிலே
    ரத்ன கல்பிதமான க்ருஹம் தனிலே
    சித்தமாம் மணிமயப் பீடத்திலே
    ச்ரி தேவியே உன்னை நான் தியானிக்கிறேன்

    ஏதமில் ஒளிமணி இணையற்ற ரத்தினம்
    இணைத்த பொன்னாசனப் பீடத்திலே
    எல்லா உலகாளும் ராஜேஸ்வரி உன்னை
    ஏழை நான் இருத்தியே பூஜிக்கிறேன்

    இப்படியே போகும். இன்னைக்கு நீங்க எழுதியிருக்கிறதப் படிச்சவுடனே அந்தப் பாட்டு நினைவுக்கு வந்திருச்சு. :-)

    ReplyDelete
  2. ஆகா, என்ன அழகான பாடல். முடிகையில் முழுப்பாடலையும் இங்கே இடுங்களேன்... நன்றி குமரா :)

    ReplyDelete
  3. யக்கா
    பாட்டு மனசுக்குள்ள குடிசை கட்டி உக்காந்துகிடிச்சி!

    //மனசுவச்சு நீயும் வரணும்
    மகளுக்கு ஒன் அன்பத் தரணும்//

    அப்போ நாங்க? :))

    மனசுவச்சு நீயும் வரணும்
    மக்களுக்கு ஒன் அன்பத் தரணும்

    ReplyDelete
  4. http://www.esnips.com/doc/0ebab80b-a3dc-4f88-9199-897744384b18/manaukkulle-kudisai-katti

    please listen to the song alone here.I am not able to upload the video, since
    we are not getting access to www.youtube.com in India. I do not know whether BSNL has blocked it.
    thatha

    ReplyDelete
  5. http://m.youtube.com/watch?v=R4X6-4IhfwU&client=mv-google&gl=IN&hl=en

    kindly see whether u get the video here.

    thanks for your patience.
    subbu thatha

    ReplyDelete
  6. //யக்கா
    பாட்டு மனசுக்குள்ள குடிசை கட்டி உக்காந்துகிடிச்சி!//

    அப்படியா. ரொம்ப சந்தோசம் கண்ணா.

    //மனசுவச்சு நீயும் வரணும்
    மக்களுக்கு ஒன் அன்பத் தரணும்//

    அப்படியே ஆகட்டும். :)

    ReplyDelete
  7. ரெண்டு லிங்க்குமே வேலை செய்யலை தாத்தா :( நீங்க வேற அனுப்பின பிறகு கேட்கிறேன்...

    ReplyDelete
  8. தை வெள்ளி சிறப்பழைப்பா அக்கா?...
    மிக எளிமைகவும், அருமையகவும் வந்திருக்கு....

    ReplyDelete
  9. manasukkulle
    and
    Om Sree matha ( in raag sivaranjani )
    now available in
    http://ceebrospark.blogspot.com

    ReplyDelete
  10. //தை வெள்ளி சிறப்பழைப்பா அக்கா?...
    மிக எளிமைகவும், அருமையகவும் வந்திருக்கு....//

    தை வெள்ளின்னு realize பண்ணாமயேதான் இந்த பாடலை இட்டேன். நன்றி மௌலி, என்னால முடிஞ்சதைத்தான் அவகிட்ட சொன்னேன் :)

    ReplyDelete
  11. //manasukkulle
    and
    Om Sree matha ( in raag sivaranjani )
    now available in//

    ரெண்டு பாடலையும் இப்போதான் கேட்க முடிஞ்சது. குறிப்பா சிவரஞ்சனில குமரன் இட்ட பாடல் வெகு அழகா வந்திருக்கு! மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  12. //மனசுக்குள்ள குடிசை கட்டி
    மாக்கோலம் போட்டு வச்சேன்//

    வாயிலார் நாயனார் போல மனசிலே கோவிலா??

    நிச்சயம் அம்பாள் வருவாள்.

    ReplyDelete
  13. மனசுக்குள்ள குடிசை கட்டி
    மாக்கோலம் போட்டு வச்சேன்

    மாவிலயத் தொங்க விட்டு
    மல்லியப்பூ தொடுத்து வச்சேன்///

    நல்ல அழகான வரிகள்

    தேவா....

    ReplyDelete
  14. அகல் வெளக்க ஏத்தி வச்சு
    ஆத்தா ஒனக்கு அழப்பு வச்சேன்

    மனசுவச்சு நீயும் வரணும்
    மகளுக்கு ஒன் அன்பத் தரணும்///

    உங்க அன்பு
    எங்களுக்கும்
    வேணும்!!

    தேவா...

    ReplyDelete
  15. //நிச்சயம் அம்பாள் வருவாள்.//

    தேவையான நேரத்துல நல்ல வார்த்தை சொன்னதுக்கு மிக்க நன்றி கைலாஷி :)

    ReplyDelete
  16. //நல்ல அழகான வரிகள்//

    வாங்க தேவா. முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி.

    //உங்க அன்பு
    எங்களுக்கும்
    வேணும்!!//

    எல்லாருக்கும் அம்மா; எல்லாருக்கும் அன்புதான் :)

    ReplyDelete