வருடா வருடம் சித்திரை மாதம் பிறந்து முதல் வியாழக்கிழமை, புதுக்கோட்டையிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடக்க ஆரம்பிச்சு, செவ்வாய்க் கிழமை போய் சேருவது வழக்கம். நானும் இந்த வருடம் (இரண்டாவது முறையா) இந்த பாத யாத்திரையை அவளருளால் நல்லபடியா முடிச்சிட்டு வந்தேன். தினமும் பகலில் தூங்கிட்டு சாயந்திரம் வெயில் தணிஞ்சதும் நடக்க ஆரம்பிச்சு, மறுபடி காலைல சூரியன் சுடற வரை நடப்போம். வழியெல்லாம் அவள் நினைவும் பாடல்களும்தான் துணை. அந்த தையல் நாயகிக்காக ஒரு பாட்டு...
சித்திரை மாதத்திலே தையல்நாயகி - தங்க
சித்திரமாம் உன்னைக் காண தையல்நாயகி
தத்திநடை பழகி வந்தோம் தையல்நாயகி - எங்கள்
முத்து நகை வடிவழகே தையல்நாயகி
பாதையெல்லாம் கல்லும் முள்ளும் தையல்நாயகி - நாங்கள்
பாதம் நோக நடந்து வந்தோம் தையல்நாயகி
வாதையெல்லாம் தீர்த்திடுவாய் தையல்நாயகி - தாயின்
வாஞ்சையுடன் அரவணைப்பாய் தையல்நாயகி
காட்டுவழி வந்தோமடி தையல்நாயகி - நாங்கள்
காரிருளில் தடுமாறி தையல்நாயகி
கண்ணொளியால் இருளகற்றி தையல்நாயகி - நீதான்
காப்பாற்ற வேணுமடி தையல்நாயகி
சித்தமெல்லாம் நிறைஞ்சிருக்கு தையல்நாயகி - உந்தன்
சின்ன முல்லைச் சிரிப்பாலே தையல்நாயகி
பித்தமெல்லாம் தெளிய வைப்பாய் தையல்நாயகி - உந்தன்
பேரருளின் ஒரு துளியால் தையல்நாயகி
நித்திலமாம் உன் பெயரை தையல்நாயகி - நாங்கள்
நித்தம் நித்தம் பாடி வந்தோம் தையல் நாயகி
சொத்தெதுவும் வேண்டாமடி தையல்நாயகி - நீ
சொந்தமானால் போதுமடி தையல்நாயகி!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://vidursury.blogspot.com/
அக்காவின் மீள்வருகை முதல் பின்னூட்டம் என்னதே! :)
ReplyDeleteபுதுக்கோட்டை டு வைத்தீஸ்வரன் கோவில் நடைப்பயண வீராங்கனைக்கு வாழ்த்துக்கள்! :)
என்னவொரு ஒற்றுமை! சென்ற முறை அம்மா அப்பா மணிவிழாவின் போது நாங்களும் தையல் நாயகியைத் தரிசித்தோம்! நவராத்திரி அதுவுமாய்!
தையல் நாயகி மட்டும் தானா? என்னோட முத்துக் குமார சாமி பய புள்ள பத்தியும் ஏதாச்சும் சொல்லுங்க! எப்படி இருக்கான் அவன்?
ReplyDeleteஆஹா ஆஹா! நீங்க புதுக்கோட்டையா? மாயவரம் வழியா தானே வருவீங்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு! ஒரு வார்த்தை "மயில்" அனுப்பி இருந்தா என் குடும்பத்தை விட்டு மாயவரத்திலே பார்க்க சொல்லியிருப்பேனே! கையிலே குச்சி வச்சிகிட்டு பெரியவர் சின்னவர்வித்யாசம் இல்லாம எங்க ஊரை கடந்து போகும் இந்த பக்தி கூட்டத்தை மாயவரமே கையெடுத்து கும்பிடுமே!
ReplyDeleteகேயாரெஸ் அந்த பயபுள்ளைக்கு இன்னும் 3 பேர் இருக்கோம். ஆசையுடன் தெரிஞ்சுக்க!
ReplyDeleteசீமாச்சு அண்ணா, நான், ஆயில்யன்! தனி உரிமை கோர வேண்டாம் என கழுத்தில் கத்தி வைத்து அன்புடன் கேட்டுக்கறேன்!
//சொத்தெதுவும் வேண்டாமடி தையல்நாயகி - நீ
ReplyDeleteசொந்தமானால் போதுமடி தையல்நாயகி!//
அன்னை அருகிருந்தால் ஏது குறை. அற்புதம் கவிநயா.
//கேயாரெஸ் அந்த பயபுள்ளைக்கு இன்னும் 3 பேர் இருக்கோம்.//
அடியேனும் கூடத்தான் அதனாலதான் அவர் பேரை எனக்கு வெச்சாங்க எஙக அம்மா.
//சொத்தெதுவும் வேண்டாமடி தையல்நாயகி - நீ
ReplyDeleteசொந்தமானால் போதுமடி தையல்நாயகி!//
அன்னை அருகிருந்தால் ஏது குறை. அற்புதம் கவிநயா.
//கேயாரெஸ் அந்த பயபுள்ளைக்கு இன்னும் 3 பேர் இருக்கோம்.//
அடியேனும் கூடத்தான் அதனாலதான் அவர் பேரை எனக்கு வெச்சாங்க எஙக அம்மா.
//அக்காவின் மீள்வருகை முதல் பின்னூட்டம் என்னதே! :)//
ReplyDeleteநல்லது கண்ணா :) வாங்க...
தையல்நாயகியை நீங்களும் பார்த்தீங்களா? மிக்க மகிழ்ச்சி :)
வாங்க அபி அப்பா.
ReplyDelete//ஆஹா ஆஹா! நீங்க புதுக்கோட்டையா?//
டபுள் ஆஹா பார்த்து குஷியாயிருச்சு :)
//ஒரு வார்த்தை "மயில்" அனுப்பி இருந்தா என் குடும்பத்தை விட்டு மாயவரத்திலே பார்க்க சொல்லியிருப்பேனே!//
அடடா, தெரியாம போச்சே :( ஹ்ம்... ஆனா அதுக்கென்ன, அடுத்த முறை கண்டிப்பா மயிலை அனுப்பிடறேன் :)
//கையிலே குச்சி வச்சிகிட்டு பெரியவர் சின்னவர்வித்யாசம் இல்லாம//
ஆமா, கம்பு ஊணாம நடக்க முடியாது...
வாங்க கைலாஷி.
ReplyDelete//அன்னை அருகிருந்தால் ஏது குறை. அற்புதம் கவிநயா.//
ரசனைக்கு மிக்க நன்றி.
முத்துக்குமரன் பத்தி எல்லாரும் கேட்டிருக்கீங்களே... :) நாங்க போன அன்னிக்கு அவனுக்கும் வள்ளி தெய்வானைக்கும் ரத்தின அங்கி சாற்றியிருந்தாங்க! அழகனோட அழகுக்கு கேட்கணுமா? :)
ReplyDeleteபித்தெனவே உன் பதத்தைத் தையல்நாயகி - பேசிப்
ReplyDeleteபோற்றி வந்தாள் எங்கள் அக்கை தையல்நாயகி
முத்துதிர்ந்த அவள் பதத்தைத் தையல்நாயகி - மேலும்
மேன்மையுறப் போற்றி நின்றேன் தையல்நாயகி
ச்சோ ச்வீட்! :) அழகுக் கவிதைக்கு மிக்க நன்றி (குமர)கவிஞரே.
ReplyDeleteபதிவின் இரு பாடல்களும் இங்கே கேட்கலாம்.
ReplyDeleteமேடம் கவி நயா அவர்கள் ஒரு புனிதப் பயணத்தை மேற்கொண்டபின்
இப்பாடலை இயற்றியிருக்கிறார்கள்.
அவர்களுக்கும் வைத்தீஸ்வரன் கோவில் குல தெய்வம் என அறிய
வியப்பாக இருக்கிறது. எங்களுக்கும் அதே கோவில் தான்.
அது சரி, பாதைகள் கல்லும் முள்ளாகவும் ஆகவா இருக்கின்றன ?
அன்னையின் நினைவில் நடப்போருக்கு பாதம் நோகுமா என்ன ?
சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com
வாங்க சுப்பு தாத்தா.
ReplyDeleteகுல தெய்வம் அல்ல என்றாலும் தையல்நாயகியோட எனக்கு ஒரு சிறப்பு உறவு உண்டு :)
//அன்னையின் நினைவில் நடப்போருக்கு பாதம் நோகுமா என்ன ?//
நீங்க சொல்லும் நிலை மனம் சமநிலைப்பட்ட ஞானியருக்கே சாத்தியம். அவங்களுக்கு வேணும்னா வலியும் உணர்வுகளும் துன்பங்களும், ஏன் இன்பங்களும் கூட அவளோடு ஒன்றி விடலாம். ஆனால் நான் மிகச் சாதாரணத்திலும் கீழான மனுஷி. அவளை நினைக்க "முயற்சி"தான் செய்துகிட்டிருக்கேன்.
வருகைக்கு நன்றி தாத்தா. பாடல் கேட்ட பின் மீண்டும் வரேன்.
இரண்டு பாடல்களையும் ரசித்தேன். மிக்க நன்றி தாத்தா.
ReplyDeleteஎளிமையான அருமையான பாடல். :-)
ReplyDeleteமிகவும் பிடித்திருக்கிறது !
~
ராதா
நல்வரவு ராதா.
ReplyDelete//எளிமையான அருமையான பாடல். :-)
மிகவும் பிடித்திருக்கிறது !//
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.
அடுத்த வருட வைத்தீஸ்வரன் கோவில் பாதயாத்திரையின் “ஹிட்” பாடல் இது தான்...
ReplyDeleteநல்வரவு செந்தில் குமார்.
ReplyDelete//அடுத்த வருட வைத்தீஸ்வரன் கோவில் பாதயாத்திரையின் “ஹிட்” பாடல் இது தான்...//
நீங்க சொன்னா சரிதான் :) 'கவிநயா' வலைப்பூவிலும் இன்னொரு தையல்நாயகி பாடல் இருக்கு. முடியும்போது பாருங்க...
உங்களை இங்கே பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு மிக்க நன்றி.