சகல கலா வாணியே சரணம் தாயே
சங்கீத வீணா பாணியே (சகலகலாவாணியே)
இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
எங்களுக்கு அருள்வாய்- மங்களச் செல்வியே
(சகலகலாவாணியே)
அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
(சகலகலாவாணியே)
முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
முப்பெரும் அறிவுடன் இப்பொது விளங்கிடும்
புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
(சகலகலாவாணியே)
இயற்றியவர்: கவியோகி. திரு. சுத்தானந்த பாரதியார்
தட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. தமிழ்த்தேனீயார் (நன்றி)
சங்கீத வீணா பாணியே (சகலகலாவாணியே)
இகமும் பரமும் நல்ல சுகமளிக்கும் கல்வி
எங்களுக்கு அருள்வாய்- மங்களச் செல்வியே
(சகலகலாவாணியே)
அறம் பொருள் இன்பமும் ஆற்றலும் ஆயுளும்
ஆத்ம ஞானமும் பூத்துப் புகழ் சிறந்தே
திறம் பெற்ற தீரராய், திருவுடை வீரராய்
தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்
(சகலகலாவாணியே)
முதுபெரும் புலவரும் முனிவரும் போற்றிய
முப்பெரும் அறிவுடன் இப்பொது விளங்கிடும்
புதுப்புதுக் கலைகளும் பொருள்களும் அறிந்திங்கே
பூரணராக வாழும் புண்ணியம் அருளுவாய்
(சகலகலாவாணியே)
இயற்றியவர்: கவியோகி. திரு. சுத்தானந்த பாரதியார்
தட்டச்சி மின் தமிழ் குழுமத்திற்கு அனுப்பியவர்: திரு. தமிழ்த்தேனீயார் (நன்றி)
அழகான பாடலுக்கு நன்றி குமரா.
ReplyDeleteபள்ளிக்கூட வாழ்க்கையில் இந்தப் பாட்டை அடிக்கடி கடவுள் வாழ்த்தாகப் பாடினது நினைவு வருது குமரன்.
ReplyDeleteஅருமையான எளிமையான பாடல்!
நன்றி கவிக்கா.
ReplyDeleteஅமாம் துளசிக்கா. மின் தமிழ் குழுமத்திலயும் சிலர் சொன்னாங்க - இந்தப் பாடலை பள்ளிக்கூடத்துல பாடுனதா. எனக்கு அப்ப இந்தப் பாட்டைச் சொல்லிக் குடுக்கலை. மின் தமிழ்ல வந்தப்பத் தான் படிச்சேன்.
ReplyDeleteநன்றிக்கா.
//தேச நலம் புரியும் திவ்ய வரம் தருவாய்//
ReplyDeleteகவியோகியார் ஆன்மீகப் பாடலில் தம் தேசபக்தியும் கலந்து தருவது இன்னும் இனிமை!
விடுதலைக்கு முந்தைய காலத்தில்...பள்ளியில் பாடும் போது, கடவுள் வணக்கம்-ன்னு சொல்லிறலாம்! தேச எழுச்சியும் உண்டல்லவா?
இந்த பாடலை என் மகள் பாடுவாளே.. பாடி பதிவிடலாம்.. :)
ReplyDeleteபாடிக் குடுக்கச் சொல்லுங்க முத்துலெட்சுமி. எனக்கு மின்னஞ்சல்ல அனுப்புனா இடுகையில சேர்த்துடறேன். நன்றி.
ReplyDelete