Monday, June 8, 2009

அறியாயோ?



சின்னச்சிட்டுக் குருவி ஒண்ணு
பெருங்கடலின் ஓரம் நின்னு
ஒருதுளிக்கு ஏங்குவதை
அறியாயோ - அம்மா
ஒருதுளிக்கு ஏங்குவதை அறியாயோ?

ஒத்தக்கன்னுக் குட்டி ஒண்ணு
சுத்திப்பாத்து தெகச்சு நின்னு
பசுவுக்கென ஏங்குவதை
அறியாயோ - அம்மா
பசுவுக்கென ஏங்குவதை அறியாயோ?

கன்னஞ் செவந்த மொட்டு
கண்ணீர ஏந்திக்கிட்டு
சூரியனுக் கேங்குவதை
அறியாயோ - அம்மா
சூரியனுக் கேங்குவதை அறியாயோ?

அமாவாச வானம் அது
இருட்டப் பாத்து பயந்துக்கிட்டு
முழுநெலவுக் கேங்குவதை
அறியாயோ - அம்மா
முழுநெலவுக் கேங்குவதை அறியாயோ?


--கவிநயா

12 comments:

  1. எளிமையும், இனிமையுமான பாடல்... அளித்தமைக்கு நன்றி....

    இவ்விடுகையில் உள்ள படம் சுடப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். :)

    ReplyDelete
  2. வாங்க மௌலி.

    //இவ்விடுகையில் உள்ள படம் சுடப்படுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். :)//

    சுடப்படுகிறதுன்னு நிகழ்காலத்துல இருக்கு? நீங்க சுடறீங்கன்னு சொல்றீங்களா? :)

    ReplyDelete
  3. http://www.youtube.com/watch?v=ZT2YmQ9xvUw

    paadal onnu
    raagam randu
    kanavu onnu
    kaatchi randu
    kavi onnu - athil
    nayam irandu.
    //சுடப்படுகிறதுன்னு நிகழ்காலத்துல இருக்கு? நீங்க சுடறீங்கன்னு சொல்றீங்களா?//

    ennaiya sudapporeenga ! ayyayyo !!
    bayamayirukke ! inime padamaatten
    vittudunga !!!!

    subbu thatha
    Pl. listen to the song set and sung in two raagas simultaneously.
    www.youtube.com/PichuPeran
    or the link given above.

    ReplyDelete
  4. வாங்க தாத்தா.

    //ennaiya sudapporeenga ! ayyayyo !!
    bayamayirukke ! inime padamaatten
    vittudunga !!!!//

    :)) நீங்க பாடாம இருந்தாதான்... :))

    பாடலை கேட்டேன். ராகமெல்லாம் எனக்கு தெரியாது :( ஆனால் பாடலின் உணர்வுகளை ராக(ங்கள்)ம் அருமையா வெளிக் கொண்டு வந்திருக்கு. இனிமையாகவும் உருக்கமாகவும். மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  5. கமடேஸ்வர நாயகி காளிகாம்பாள் படம் மிக்க அருமை.

    கல் இடைப்பட்ட தேரைக்கும் இரை அளிப்பவள் அன்னை அனைவரையும் காப்பாற்ற வேண்டும் பாங்கு அருமை கவிநயா.

    ReplyDelete
  6. வாங்க கைலாஷி.

    //கமடேஸ்வர நாயகி காளிகாம்பாள் படம் மிக்க அருமை.//

    ஆமால்ல? :)

    //கல் இடைப்பட்ட தேரைக்கும் இரை அளிப்பவள் அன்னை //

    அழகா சொன்னீங்க.

    ரசனைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. சிறுகுருவிக்கு ஏக்கத்தைத் தந்ததும் நான்
    சிறுதுளிக்குள் இருந்துன் தாகத்தைத் தீர்ப்பதும் நான்
    சிறுதுளிதான் பெருங்கடலாய் ஆனதை நீ அறியாயோ
    சிறுகுருவி நீ சொல்லு! ஏக்கம் எதுக்கென்று!

    கன்றும் மறந்து விடும் விளையாட்டு ஆசையிலே
    கன்றை மறக்காமல் தாய்ப்பசு கதறுது பார்!
    புவனங்கள் படைத்தாலும், தாய்மை போய்விடுமோ?
    கன்றுக்குக் குரல்கொடுத்து தாயிங்கு அழைப்பதைப் பார்!

    ReplyDelete
  8. நல்வரவு திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு.

    ரொம்ப அழகா சொன்னீங்க. நீங்க சொல்வது சரிதான். விஷயம் தெரிஞ்சவங்கல்லாம் அப்படித்தான் சொல்றீங்க. ஆனா சிட்டுக்குருவிக்குத்தான் பாவம், அதெல்லாம் தெரியல. கண்ணாமூச்சி எப்ப முடியுமோங்கிற ஏக்கம்தான் அதுக்கு :(

    வருகைக்கும் அற்புதமான (பதில்) கவிதைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  9. கண்ணாமூச்சி விளையாட்டின் சுவாரசியமே தேடிக் கண்டுபிடிப்பது தான். அதைத் தெரிந்து கொண்டு விளையாடினோமானால், ஆட்டம், அலுப்புத் தராது. இங்கேயும் அதுபோலத்தான், உள்ளே இருப்பதை, வேறெங்கோ தேடித் தேடி அலைகிறோம், கொஞ்சம் அயர்வு வருகிறது. இந்த அயர்வும் கூடக் கடந்து போகும் ஒரு அனுபவம் தான்!

    ReplyDelete
  10. //இந்த அயர்வும் கூடக் கடந்து போகும் ஒரு அனுபவம் தான்!//

    சீக்கிரம் கடந்து போகட்டும்.

    //உள்ளே இருப்பதை, வேறெங்கோ தேடித் தேடி அலைகிறோம்,//

    உங்கள் வார்த்தைகள் நான் முன்பு எழுதிய ஒரு கவிதையை நினைவுபடுத்தின. அடுத்ததாக பதிகிறேன் :)

    ReplyDelete
  11. நல்லா இருக்குக்கா பாட்டு. பாத்தா சொல்லுங்க.

    ReplyDelete
  12. நன்றி குமரா. யாரை பார்த்தா சொல்லணும்? புரியலையே. அம்மாவையா? :)

    ReplyDelete